யாழ்ப்பாணத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சின்ஹா

0
159
sinha1இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.
முதலில் யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற இடங்களான நல்லூர் கந்தசாமி கோவில், சங்கிலியன் கோட்டை, யாழ்.கோட்டை, போன்ற இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார்.
அதன்பின்னர் பிற்பகல் 2.45 மணிக்கு கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் நிறுவப்பட்ட ‘மொழியியல் – கற்பித்தல் ஆய்வுகூடத்தைத் திறந்து வைப்பார்.
இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ். இராதகிருஷ்ணன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொள்வர்.
நாளை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இந்திய முனையத்தை திறந்து வைப்பார். இதில் வட மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிகக்கார,வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரும் பங்கேற்பர்.
பின்னர் முற்பகல் 11.15 மணிக்கு யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பொறியியல், விவசாய பீடங்களை நிறுவும் நிகழ்வில் அவர் பங்கேற்பார். துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் உயர்ஸ்தானிகருடன் வட மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிகக்காரவும் கலந்துகொள்வார்.
பிற்பகல் 2 மணிக்கு வவுனியா பொது வைத்தியசாலையில் இந்திய நிதி உதவியில் அமைக்கப்பட்ட 200 படுக்கைகளுடன் கூடிய விடுதியை உயர் ஸ்தானிகர் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிப்பார். வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கலந்து கொள்வார்.
மேலும் இவர் இரண்டு நாள் பயணமாக வடமாகாணத்திற்கு வருகை தந்து இந்திய அரசின் உதவியில் வடமாகாணத்தின் அபிவிருத்திக்காக அமைக்கப்பட்டதை கையளிப்பதற்காகவே அவரின் வருகை அமைந்திருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here