சுன்னாகம் கந்தரோடையில் வாய்த்தர்க்கம் கல்லெறியாக மாறி ஒருவர் சாவு!

0
256

Covered dead body of a person in the morgue with a tag attached to the toe
Covered dead body of a person in the morgue with a tag attached to the toe
சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் இரு உறவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கல்லெறியாக மாறியதில், குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர் 46 வயதுடைய இரத்தினம் தயாபரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். கந்தரோடைப் பகுதியில் நேற்று மாலை இருவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாய்த்தகராறு தீவிரமடைந்து, ஒருவருக்கொருவர் கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்மோது ஒருவர் எறிந்த கல்லானது மற்றையவரின் தலையைப் பதம் பார்த்ததையடுத்து, அவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here