தாயக உறவுகளுக்கு உதவிடும் நோக்கில் கடந்த 06.09.2015 அன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறையினரால்; நடாத்தப்பட்ட விடுதலை முரசம் கலை நிகழ்வின் மூலம் பெறப்பட்ட நிதியானது போரின்போது பாதிக்கப்பட்டவர்கள் என இனம்காணப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதியை வாழ்விடமாகக்கொண்ட முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
குறித்த உதவிகள், யாழ்ப்பாணத்தில் சிறப்பாக ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வொன்றில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இதில் பன்னிரண்டு குடும்பங்கள் வாழ்வாதார சுயதொழில் முயற்சி நிதியாகவும், பொருளாகவும் பெற்றுக்கொண்டன. இக்குடும்பங்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஐம்பதாயிரம் ரூபா முதல் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாவரை கொடுக்கப்பட்டது.
இவ்வுதவியை பெற்றுக்கொண்ட குடும்பங்கள், பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறையினர் மற்றும் பிரான்சு வாழ் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த போதிலும் தாயக உறவுகளை மறக்காதிருப்பதை நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.
















https://www.youtube.com/watch?v=aQGPrn9gfs0&feature=youtu.be