கிளிநொச்சியில் இன்று தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் 6.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மன்னார் பிரதேசத்தினை சேர்ந்த 62 வயதுடைய நிக்ஸன் ஸ்ரீபன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரதமே மோதியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். புகையிரத கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் மகளின் திருமண 4ம் சடங்கிற்காக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.