அம்பாறையில் தொடரும் கடும் மழை தாழ்நிலங்களில் வெள்ளம் : இயல்பு நிலை பாதிப்பு!

0
188

f5d40fdfஅம்பாறை மாவட்டத்தில் கடந்த   4 நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில், திருக்கோவில், லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நட்பிட்டிமுனை, நாவிதன்வெளி, மருதமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தாழ்ந்த நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் அப் பகுதியில் தங்கியிருந்த மக்கள் இடம்பெயர்ந்து உறவினர், நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

அதேவேளை உள்ளுர் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளது. தாம் உபோதிகளிலும் வாய்க்கால்களிலும் நீர் பெருக் கெடுத்துள்ளன. தொடர்ச்சியான மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.

கடல் கொந்தளிப்பு காரணமா மீனவர்கள் கடலுக்குச் செல்லவதில்லை இதனால் கடற்றொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நன்னீர் மீன்பிடித் தொழிலும் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளதுடன் அன்றாட தொழிலாளர்களின் நாளாந்த தொழில் நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளன. கடல் மீன், மரக்கறிவகை என்பவற்றின் விலையும் என்றுமில்லாதவாறு அதிகரித்துக் காணப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சில பிரதேசங்களில் வடிகால்கள் துப்புரவு செய்யப்படாமலுள்ளதால் மழை நீர் வடிந்தோடமுடியாதநிலைகாணப்படுகின்றது.

சிலபிரதேசங்களில் இயந்திரங்கள் மூலம் வாய்க்கால்கள் தோண்டப்பட்டுள்ள போதிலும் முறையாக நீர் வழிந்தோடவில்லையெனபொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மழைநீர் தேங்கியுள்ள வடிகால்களை துப்பரவு செய்து மழை நீர் வழிந்தோட முடியாதவாறு தேங்கி நிற்கும் இடங்களிலிருந்து நீரைவடிந்தோட செய்ய உள்ளுராட்சிமன்றங்களினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதால் பெரும்போக நெற்செய்கையும் பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here