இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 23பேர், இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணக் கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்.மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவுக்கு அண்மிய கடற்பரப்பில் 2 விசைப்படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்களும், பருத்தித்துறைக்கு அண்மிய கடற்பரப்பில் 2 விசைப்படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 10 மீனவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தின் நாகை மற்றும் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை அந்தந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.