நாகர்கோயில் கடலில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் குளிக்கச் சென்று காணாமல் போன இரு இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவர்களது உடமைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கரையில் வெகுநேரம் இருந்ததை அவதானித்த பிரதேச மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து பொலிஸாருடன் இணைந்து மீனவர்களின் உதவியுடன் மேற்கொண்ட தேடுதலில் 25 வயது மதிக்கத்தக்க ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞருடன் குளிக்கச்சென்ற மேலும் ஒருவரை தேடும் பணியை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் கடந்த மஹிந்த ஆட்சியில் அரச உத்தியோகத்தர்களுக்காக வழங்கப்பட்டதென தெரிவிக்கப்படும் நிலையில், உயிரிழந்தவர் ஓர் அரச உத்தியோகத்தராக இருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபர் குறித்த விபரங்களை அறியும் நடவடிக்கையை, பொதுமக்கள் உதவியுடன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.