சுவிசில் பயணிகளுடன் தொடருந்தைக் கடத்தியவர் சுட்டுக்கொலை!

0
161

சுவிற்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் தொடருந்து ஒன்றில் 15 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்து நபர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று இன்று வெள்ளிக்கிமை சுவிஸ் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 6.35 மணியளவில் மலை மாவட்டமான Vaud இல் Baulmes மற்றும் Yverdon-les-Bains இடையே தொடருந்தில் தொடங்கியது.

14 பயணிகளும் தொடருந்து ஓட்டுநரும் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் அந்த நபரால் தடுத்து வைக்கப்பட்டனர். தொடருந்துக்குள் நுழைந்த காவல்துறையினர் குறித்த நபரைச் சுட்டுக் கொன்றனர்.

பணயக் கைதிகள் அனைவரும் காயமின்றி விடுவிக்கப்பட்டனர்

பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்து நபரிடம் கோடரி மற்றும் கத்தி இருந்தன. இவர் 32 வயதுடைய ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர். இவர் ஆங்கிலம் பேசக்கூடியவர் என்று காவல்துறை கூறியது.

இச்செயலைச் செய்த நபரின் நோக்கம் குறித்து எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here