தமிழியல் பட்டப்படிப்பிற்கான புதிய மாணவர் சேர்க்கையும் வரவேற்பு நிகழ்வும் 11-02-2024 !

0
207

இளங்கலைத் தமிழியல் (B.A Tamil ) பட்டப்படிப்பிற்கான புதிய மாணவர்கள் சேர்க்கையும் வரவேற்பு நிகழ்வும் எதிர்வரும் 11/02/2024 ஞாயிறுக்கிழமை  13.00 மணிக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகக் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. ஆண்டு 12 வரை  தமிழ் பயின்றவர்கள்,   தமிழ்ச்சோலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தமிழ்மொழியில்  ஆர்வம் உள்ளவர்களும் இப்பட்டப்படிப்பை மேற்கொள்ளமுடியும்.  

மேலும், இவ்வாண்டு தமிழியல் முதுகலைமாணிப் (M.A. Tamil) பட்டப்படிப்பும் தொடங்கப்பட்டு, முதற்கட்டப் பதிவுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

தமிழ்மொழி  கற்பிக்கும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நோக்கோடு  கற்பித்தலுக்கான பட்டயப் பயிற்சிநெறியும் தொடங்கப்படவுள்ளது. 

தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டச்சான்றிதழ் பிரெஞ்சு அரசால் ஐரோப்பிய மட்டத்திலான பட்ட மேற்படிப்பிற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய விளத்தமாகும்.

(Formation reconnue par l’Etat par le biais de l’attestation de comparabilité qui confère le grade de licence(bac+3).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here