பிரான்ஸ் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எல்லைகள் மூடப்பட்டு நாடு முழுமையான பாதுகாப்புக்கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படுவதாக அதிபர் ஹொலன்ட் சற்றுமுன்னர் நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கிறார்.
தேசிய உதைபந்தாட்டத் திடலில் இருந்து நூற்றுக்கணக்கான ரசிகர்களுடன் பாதுகாப்பாக வெளியேறிய அதிபர், பின்னர்,உள்துறை அமைச்சில் கூட்டப்பட்ட அவசர பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டார்.அதன் பின்னர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார்.