பிரான்சு பாரிஸ் நகரில் தாக்குதலில் ஒட்டுமொத்தமாக 6 முக்கிய பகுதிகளில் தீவிரவாதிகள் பயங்கரவாத தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பாரிஸ் நகரின் மத்திய பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் Francoise Hollande நாடு முழுவதும் அவசரகால நிலையை பிரகடப்படுத்தியுள்ளார்.
மேலும் பிரான்ஸ் நாட்டின் அனைத்து எல்லைகளையும் உடனடியாக மூடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள் அல்லாஹ் அக்பர் என கத்திக்கொண்டே, இது சிரியா நாட்டுக்காக என முழங்கியதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் பிரித்தானியா பிரதமர் டேவிட் கெமரூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
https://youtu.be/pyMwv2jKKpc
Stade de France விளையாட்டு அரங்கு அருகே 2 வெடிகுண்டுகள் வெடித்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள்,
100 பொதுமக்களை பணையக்கைதியாக பிடித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொலிஸ் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் சம்பவ இடத்தை முற்றுகையிட்டுள்ளனர்.