
தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவு இறுதி நாள் நினைவேந்தல் நல்லூரில் ஆரம்பமாகியுள்ளது.

தமிழ் மக்களின் சுதந்திர வாழ்வுக்காய் இந்திய அரசிடம் 15.09.1987 அன்று ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். நல்லூர் முன்றலில் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலை போராட்டம் தொடர்ந்து 26.09.1987 அன்று 12ம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று யாழ், நல்லூரிலுள்ள திலீபனின் நினைவிடத்தில் அவரினை நினைவு கூரும் வகையில் தமிழர் தேசமெங்கிலுமிருந்து தியாக தீபத்தை நினைவேந்திட மக்கள் கொட்டும் மழையிலும் அலையென திலீபனின் கனவை சுமந்து அக்கனவை நினைவாக்க வருகை தந்த வண்ணமுள்ளனர்

நினைவேந்தல் நிகழ்வை தீபம் ஏற்றி ஆரம்பிவைக்க அதையடுத்து தியாக தீபம் திலீபனின் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.


திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகத்தின் பல பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்படுகின்றது.





இதே நேரம் கடந்த 15 .09.2023 அன்று தீயாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 36 வது நினைவு தினத்தினை முன்னிட்டு பொத்துவில் தொடக்கம் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயம் வரையான திலீபனின் திரு உருவப்படம் தாங்கிய வாகன ஊர்த்திப் பவனி ஆரம்பமாகியுள்ளது. தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலில் 3 ஆம் நாளாகிய 17.09.2023 அன்று பொத்துவில் தொடங்கி நல்லூர் வரையான திருவுருவப் படம் தாங்கிய நினைவூர்தி திருகோணமலை மாவட்டத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை,கப்பல்துறைப்பகுதியில் வைத்து, சிறிலங்கா புலனாய்வாளர்களும் காடையர்களும் இணைந்து ஊர்தி மற்றும் திருவுருவப்படம் என்பவற்றினை அடித்து நொறுக்கியதோடு, ஊர்தியின் சாரதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வாராசா கஜேந்திரன் உட்பட உடன்பயணித்தோர்களை அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளனர்.





இந்நிலையில் பேரினவாத சிங்கள அரசின் அடக்குமுறையை ஊடறுத்து பேரெழுச்சியுடன் பயணிக்கும் திலீபன் ஊர்திப்பவனி தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலில் பொத்துவில் தொடங்கி நல்லூர் வரையான திருவுருவப் படம் தாங்கிய நினைவூர்தி தடைகளை உடைத்து புதிய மிடுக்குடன் இன்று நல்லூரில் வந்தடைந்துள்ளது.


இந்திய அரசிடம் 15.09.1987 அன்று ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து வட தமிழீழம் , யாழ். நல்லூர் முன்றலில் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலை போராட்டம் தொடர்ந்து 26.09.1987 அன்று 12ம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 36 ஆவது நினைவு தினம் தமிழீழத்தில் தொடங்கி புலம்பெயர் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.
ஐந்து அம்ச கோரிக்கை
1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.
2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3) இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.
4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ , பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.