
மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் இன்று காலை நடைபெற்ற வாள்வெட்டு சம்பவபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாகிய நிலையில் ஒரு குழுவை சார்ந்தவர்கள் மற்றைய குழு நபர் மீது கூறிய ஆயதங்களால் தலையில் தாக்கியதில் படுகாயமடைந்த தாக்குதலுக்கு இலக்கானவர் நானாட்டான் பிரதேச புளியடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
மரணித்தவர் அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் ராதா துஷியந்தன் விஜய் என்கிற 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தை என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த மன்னார் – முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இறந்தவரின் சடலம் மன்னார் – நானாட்டான் பிரதேச புளியடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் செய்திகள் தெரிவிக்கின்றன.