எத்தனை எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் தமிழினம் மாவீரர்களை மறந்துவிடாது: பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

0
204

மாவீரர் நாள் 2015 நவம்பர் 27

‘ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காக போராடி

அந்த இலட்சியத்தை அடைவதற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்த மாவீரர்கள் மகத்தானவர்கள்”

– தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்து –

அன்பான பிரான்சு வாழ் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!
நவம்பர் 27 ம் நாள் மிகநெருங்கி வருகிறது. ஆம் அந்த நாள் எம்மையெல்லாம் தாயகத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் நாள். எமது தாயக விடுதலைப் பயணத்தில் இதுவரைக்கும் 45 ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் தமது இன்னுயிர்களை அரப்பணித்திருக்கிறார்கள். விடுதலைப்பாதையில் அவர்கள் கடந்து வந்த துக்கங்கள், துயரங்கள் பற்பல தமது இரும்பையொத்த இலட்சிய உறுதியாலும், தன்னலமற்ற செயலாலும், தியாகங்களாலும் தாய்மண் மீதும், தமிழ்மக்கள் மீதும் கொண்ட பற்றாலுமே இவற்றையெல்லாம் கடந்து வந்தார்கள். எமது போராட்டத்தை தளர்ந்து போகவிடாது இதுவரைக்கும் நகர்த்தி வந்தனர். தன்னலமற்ற செயலாலும், தூய்மையான வாழ்வாலும், இலட்சியத்திற்காக தமது உயிர்களை அர்ப்பணித்தாலும் அவர்கள் புனிதமானவர்கள் ஆகிறார்கள்.
எத்தனை எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் தமிழினம் மாவீரர்களை மறந்துவிடாது. அந்தவகையில் பிரான்சு வாழ் தமிழர்களின் பேராதரவுடன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு வழமைபோல் மாவீரர்நாளை எழுச்சியுடனும், உணர்வுடனும், இதயசுத்தியுடனும் நினைவுகூர்ந்து வருகிறது.
2009 இன் பின் சோர்வுற்ற போதும், மீண்டெழுந்து நாம் எமது தாயகம் நோக்கிய பயணத்திலும், மக்களின் கரிசனையிலும் எமது பணிகள் தொடர்ந்தே வருகின்றன. அந்தவகையில் பிரான்சு வாழ் தமிழ் மக்களின் ஆதரவும் உறுதுணையும் எமக்கு மாபெரும் பலத்தையும், நம்பிக்கையையும் அளித்துக்கொண்டிருக்கிறது. இதுவே உண்மை . இதனாலேயே நாம் புலத்திலும் பல அரசியல் வேலைத்திட்டங்களையும், தாயகத்தில் மனிதநேய உதவிகளையும் செய்து வருகிறோம். மற்றும் புலத்தில் எமது உபகட்டமைப்புகள் மூலமாக துறைசார் வேலைத்திட்டங்களையும் செய்து வருகிறோம் .
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு மாவீரர்நாளைச் சிறப்புடனும், எழுச்சியுடனும் நடத்தவும், 2016 ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்களைக் கொண்டுசெல்லவும் உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

 

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

maveerar 2015 copy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here