2010 ஆம் ஆண்டு காணாமல் போன ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொடவை தடுத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் கிரித்தலை ராணுவ முகாம் குறித்து விசாரணை நடத்த நீதிமன்ற அனுமதி பெறப்பட்டிருப்பதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.
இதுவரை இந்த விசாரணை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 11 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் திணைக்கள அறிக்கை கூறுகிறது.
இதில் கிரித்தலை ராணுவ முகாமில் பணியாற்றிய ராணுவ அதிகாரிகளும் அடங்குவதாகவும்இ அவர்களை சம்பந்தப்பட்ட ராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.