பிரான்சில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிற்றுந்தை செலுத்தி வந்த தமிழ் இளம் குடும்பஸ்தர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் யாழ். நயினாதீவை சொந்த இடமாகக் கொண்டு பிரான்சில் வசித்துவந்த திருவாசகம் சஞ்சிதரன் (வயது 32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் சிறந்த விளையாட்டு வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.