
தமிழர் தாயகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும், ஊவா மாகாணத்தில் ஒரு சில இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் புத்தாண்டு தினத்தை அண்டிய நாட்களிலும் புத்தாண்டு தினத்தன்றும் கொட்டித் தீர்த்த கன மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.