பிரான்சில் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த சங்கொலி தேசவிடுதலைப் பாடல் போட்டி 2021 நிகழ்வு!

0
1009

 
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் 12 ஆவது தடவையாக நடாத்திய தாயக விடுதலைப்பாடற் போட்டியான சங்கொலி விருது 2021 நிகழ்வு பிரான்சு புறநகர் பகுதியில் ஒன்றான புளோமினல் நகரத்தில் உள்ள மண்டபத்தில் நேற்று 10.10.2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தாயகவிடுதலைப்போரில் களத்தில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட 2 ஆம் லெப். மாலதி அவர்களின் 34 ஆம் ஆண்டினை நெஞ்சினில் சுமந்து இந்நிகழ்வு சிறப்பானதாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றிருந்தது.
தமிழீழ தேசிய விடுதலைப்போரில் இதுவரை தம்மை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களின் பொதுப்படத்திற்கும், 2 ஆம் லெப் மாலதியின் திருவுருவப்படத்திற்கும் மாவீரர் குடும்பத்தினர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கமும் செலுத்தியிருந்தனர். தொடர்ந்து மாவீரர்களுக்கும், மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வின் நடுவர்கள் இந்நிகழ்வில் வந்து சிறப்பாகக் கலந்து கொண்ட மாநகரமுதல்வர் மற்றும் மாநகர உறுப்பினர், ஆலோசகர் திரு.கிங்ஸ்ரன் அவர்கள், புளோமினல் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. கணேசுவரன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு. பாலகுமார் ஆகியோர் மாவீரர் திருவுருவப்படத்திற்கு மலர் வணக்கம் செய்ததுடன் அரங்க மேடைக்கு அழைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டனர்.
தொடர்ந்து நடுவர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். இன்றைய போட்டி நடுவர்களாக இசைக்கலைமணி திரு.சேயோன் அவர்கள், கலாஜோதி வயலின் வித்துவான் திரு. பரமநாதன் மகேஸ்வரன் அவர்கள், கலைமணி. செல்வி நிலானி அவர்கள், கலைமணி செல்வி அனோஜினி அவர்கள் நடுநிலை வகித்தனர். போட்டி நடுவர்களுக்கான மதிப்பளித்தலை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாக பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் அவர்கள் வழங்கியிருந்தார்.
போட்டியை தமது அறிவிப்பின் ஊடாக திரு.ஜஸ்ரின், திரு.கிருஸ்ணா ஆகியோர் சிறப்பாக நகர்த்திச் சென்றனர். இப்போட்டிகள் பாலர்பிரிவு முதல் அதிஅதிமேற்பிரிவு வரை நடைபெற்றிருந்தன.

போட்டியாளர் ஒவ்வொருவரும் அற்புதமாகப் பாடித் தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர்.
தொடர்ந்து வந்த பிரிவுகளுக்கான போட்டியாளர்களையும், அவர்கள் பாடிச்சென்ற பாடல்கள் பற்றிய தோற்றம், சம்பவங்கள் பற்றிய உதாரணங்களையும், மக்களுக்குத் தெரியாத செய்திகளையும் தெரிவித்து சிரிக்கவும், சிந்திக்கவும் செய்திருந்தார். இப்போட்டியில் பாடகர்கள் எல்லாம் மாவீரர்கள், தேசியத் தலைவர், எமது மக்கள் வாழ்வு, இந்த விடுதலைப்போரில் தமது பெற்றோர்களை , உறவுகளை இழந்து போன பிள்ளைகளின் உணர்வுப்பாடல்கள், விடுதலை போராட்டத்தில் எமது ஒருமித்த பணி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடல்களையும் தந்திருந்தனர்.
நிகழ்வில் சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். மிகப்பெரிய பேரிடரினை சந்தித்து பலகோடி மக்கள் தொற்றுக்குள்ளாகி பல லட்சம் மக்களின உயிர்களை இந்த உலகம் இழந்து நிற்கின்ற வேளையில் அந்த கொடிய கோவிட் 19 வைரசு தாக்குதலுக்கு எம்மவர்களில், கலைஞர்கள், தேசப்பணியாளர்கள், பற்றாளர்கள் எனப்பலரை நாம் இழந்திருக்கின்றோம். அதில் கடந்த மாதமும், வாரமும், நாம் இழந்த தாயகக் கலைஞர்கள். வேல்மாறன் மற்றும் கனடாவில் சாவடைந்த வர்ணராமேசுவரன் ஆகியோரை நினைவில் சுமந்து கொள்வதோடு, கலையின் இன்றைய காலம் மிகவும் எமக்கு சோதனை மிகுந்ததொன்றாகவும், சர்வதேசத்திலும் , சினிமா இசைஉலகத்தில் துன்பமும், துயரமும், கண்ணீரும், கவலையும், கொண்ட எமது தேசப்பாடல்கள் பெரும் சாவலுக்கு மத்தியில்தான் பயணப்படவேண்டியுள்ளது என்றும். அதேவேளை இன்றைய விடுதலைப் பாடற்போட்டியில் பாடிய அத்தனை பாடகர்களின் திறனும், விருப்பமும் நம்பிக்கையும் தொடர்ந்து அடுத்த பலதலைமுறையை பற்றிபிடிக்கும் என்ற நம்பிக்கை உண்டு என்றும். எம்மிடம், உண்மையும், தர்மமும், சத்தியமும் உண்டு, அது இன்று பலசோதனைகளை சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றது என்றும் அதில் கலையும் தான் என்றும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எமது பாரம்பரிய இசைக்கருவிகள் வரும் தலைமுறை தெரிந்தும் அதனையும் பயிலும் வாய்ப்பும் அற்றுப்போகின்ற நிலையை கரோக்கி என்ற ஒரு செயற்பாடு எமது வாத்தியக் கலைஞர்களையும், வளர்ந்து வரும் எமது பாரம்பரிய வாத்தியங்களை பெரிதும் பாதிக்கின்றது, பாதிக்கப்போகின்றது. அதனை ஒரு பயிற்சிக்காக மட்டுமே பாவிக்கலாம் என்பதையும் தெரிவித்திருந்தார். ஆனால், எமது பாதையம், அர்ப்பணிப்புகள் உண்மைகள் ஒருநாள் விடிவைப் பெற்றுத்தரும் என்றும், போட்டியாளர்களை உருவாக்கிய ஆசிரியர்கள், பெற்றோர்களையும் பாராட்டியிருந்தார்;. தமிழீழ தேசிய மாவீரர்நாள் வரும் 27 ஆம் பிரமாண்டமாக நடைபெற் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும், நவம்பர் மாதம்முழுதும் நடைபெறும் அனைத்து கலைத்திறன் போட்டிகளிலும்,மாவீரர் பெற்றோர் உடன் பிறந்தோர் மதிப்பளித்தலில் நவம்பர் 21 ஆம் நாள் மாவீரர் குடும்பத்தினர் கலந்துகொள்ள வேண்டும் என்றும் எமது மக்கள் பங்கு பற்றி மாவீரர்களை மகிமைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தமிழர்கள் நாம் நல்வர்கள் ஆனால், நல்லவர்கள் நாம் வல்லவர்கள் ஆகவேண்டும். இது தான் இன்றைய காலத்தின் அவசியம் என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து இவரால் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழம் பிரான்சு மண்ணில் எமது தேச விடுதலைக்காக கலைரீதியாக உழைத்து வரும் கலைஞர்களை மதிப்பளித்து வருபவர்களளை “ விடுதலையின் வேர்கள்’’ என்ற பட்டத்தை வழங்கி மதிப்பளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழீழ தேசத்தின் மெல்லிசை பாடற்கலைஞர், ஈழதேசத்தின் பாடல் அன்று பாடி பலமக்களின் மனதில் கலையால் இடம் பிடித்த சங்கீதபூசனம் எம்.எ. குலசீலநாதன் அவர்களின் கலைவாரிசும், பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் சுரத்தட்டுக் கலைஞர், பாடகர், இசைத்தொகுப்பாளர் திரு. குலசீலநாதன் கணேசு அவர்கள் 2021 ஆம் ஆண்டின் “ விடுதலையின் வேராக மதிப்பளிக்கப்படும் அறிக்கையை வாசித்தளித்திருந்தார்.
மக்களின் கரகோசத்துடன் விடுதலையின் வேராக திரு. கு. கணேசு அவர்கள் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் திரு. மகேசு அவர்களாலும், தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் துணைப் பொறுப்பாளர். திரு. அன்ரனிதாசு அவர்களாலும் “ விடுதலையின் வேர்கள் ’’ என்ற நினைவுப்பட்டயம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். இவ் மதிப்பளித்தலை பெற்று கொண்ட திரு கணேசு அவர்கள் தனது சிறிய உரையில் தான் தன் வாழ்நாள் எப்பொழுதும் தன் இனத்திற்கான கலைரீதியான பங்களிப்பை செய்வேன் என்றும் தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்திற்கு என்று பக்க பலமாக இருப்பேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு, இப்போட்டியில் தமது மாணவர்களை பங்கொள்ள வைத்த இசைஆசிரியர்கள், உப கட்டமைப்புப் பொறுப்பாளர்கள் மற்றும் போட்டியின் நடுவர்கள் சான்றிதழ், பட்டயங்கள் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தனர்.
2021 ஆம் ஆண்டு சங்கொலி விருதினை “நித்திரையா தமிழா’’ என்ற பாடலை தத்துரூபமாகத் தந்து மக்களின் பாராட்டுதலும், கரகோசத்திலும் வெற்றியை பெற்றுக்கொண்ட மரியாம்பிள்ளை டிலீஸ் ஜெறால்ட் அவர்கள் இந்த2021 ஆண்டின் சங்கொலி விருதினை; பெற்றுக்கொண்டார்.
நும்புங்கள் தமிழீழம் பாடலடன் தமிழரின்தாகம் தமிழீழத்தாயகம் தாரகமந்திரத்துடன் போட்டி நிகழ்வு 8.45 மணிக்கு நிறைவு பெற்றது.

.

போட்டி முடிவுகள் :


பாலர் பிரிவு
1ஆம் இடம் : சுதன் இயல்
1ஆம் இடம் : சுதன் இசை

கீழ்ப்பிரிவு
1ஆம் இடம் : ஜீவராஜா ப்ரவீன்ராஜா
2ஆம் இடம் : சிறிதரன் அக்ஸ்திகா
3ஆம் இடம் : சுதன் இலக்மி


மத்தியபிரிவு
1ஆம் இடம் : சசிதரன் தஸ்மிதா
2ஆம் இடம் : சுரேஸ்குமார் தமிழினி
3ஆம் இடம் : கஜேந்திரன் ஜஸ்மிகா


மேற்பிரிவு

1ஆம் இடம் : சத்தியநாதன் அமலியா
2ஆம் இடம் : ஜீவராஜா ப்ரித்தியங்கிரா
3ஆம் இடம் : ஜெயக்காந்தன் ஜெனுசா


அதி மேற்பிரிவு
1ஆம் இடம் : சிறிதரன் ஆரபி
2ஆம் இடம் : தெய்வேந்திரம் ஹரிஹரணி
3ஆம் இடம் : சுரேஸ்குமார் சாகித்தியன்


அதிஅதி மேற்பிரிவு
1ஆம் இடம் : முருகேசப்பிள்ளை விக்னேஸ்வரன்
2ஆம் இடம் : அ.செல்வராஜா
3ஆம் இடம் : பத்மராஜா வேஜிகா


சங்கொலி 2021விருது பெறுபவர் மரியாம்பிள்ளை டிலீஸ் ஜெறால்ட்

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here