வயது வேறுபாடின்றி தடுப்பூசி: அடுத்த வாரம் முதல் அனுமதி!

0
303

தடுப்பூசிகளின் காப்புரிமையை
நீக்குவதற்கு மக்ரோன் ஆதரவு

பிரான்ஸில் வயது வேறுபாடு இன்றி
சகலருக்கும் வைரஸ் தடுப்பூசி எதிர்
வரும் 12 ஆம் திகதி முதல் கிடைக்கும்
என்ற தகவலை அதிபர் மக்ரோன்
இன்று அறிவித்திருக்கிறார்.

பாரிஸ் நகரில் மிகப் பெரிய தடுப்பூசி
ஏற்றும் நிலையத்தை Parc des expositions (porte de Versailles) அரங்கில் மக்ரோன் இன்று ஆரம்பித்து வைத்தார். அதன் பிறகே இத்தகவலை அங்கு அவர் வெளியிட்டார்.

தடுப்பூசி கிடைக்கின்ற பட்சத்தில் அதனை வயதுவேறுபாடு பார்க்காமல் ஒருவருக்குச் செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட ஊசியை அவர் பெற்றுக்கொள்ளாதவிடத்து அதனை வேறு எவருக்காவது வழங்கலாம். தமக்கான நேரம் என்று காத்திராமல் Doctolib இணையம் ஊடாகப் பதிவு செய்து வயது வேறுபாடுகள் இன்றி அனைவரும் மே 12 முதல் ஊசி ஏற்றிக்கொள்ள முடியும் – என்று அரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகள் விரயம் இன்றிச் செலுத்தப்படுவதை உறுதிப்படுத்து வதற்காகவே இந்த ஏற்பாடு என்று
அவர் குறிப்பிட்டார். சகலருக்கும் தடுப்பூசி ஏற்றும் பணியை ஜூன் மாத நடுப்பகுதியில் இருந்தே ஆரம்பிப்பது என்று அரசு முதலில் அறிவித்திருந்தது.

இதேவேளை வயது வரம்பின்படி ஏற்க
னவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ஒழுங்கின் கீழ் ஐம்பது வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி
ஏற்றுவது எதிர்வரும் பத்தாம் திகதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

🔵காப்புரிமையை நீக்க ஆதரவு

தடுப்பூசி மருந்துகளுக்குச் சொந்தம் பேணுகின்ற காப்புரிமை (vaccine patents) விதிகளை இல்லாமற்செய்வதற்கு அதிபர் மக்ரோன் தனது ஆதரவை வெளியிட்டிருக்கிறார். ஒரு நாட்டுக்கு அல்லது பிரதேசத்துக்கு என்ற வரையறை இன்றி உலகின் சகல மக்களுக்கும் தடுப்பு மருந்து கிடைக்கச் செய்ய வசதியாக அவற்றின் காப்புரிமை களை நீக்குவதற்கு அமெரிக்க அதிபர்
ஜோ பைடன் ஏற்கனவே ஆதரவை வெளி
யிட்டிருந்தார்.

தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் அவற்றின் தயாரிப்பு மற்றும்
விநியோக நடைமுறைகளை விரிவு படுத்தி இலகுவாக்குவதற்கு காப்புரிமை விதிகள் தடையாக உள்ளன. சர்வதேச ரீதியில் நடைமுறையில் உள்ள தேசிய
புலமைசார் சொத்துரிமையை (national intellectual property protections) விசேட
தேவைகருதி மறுபரிசீலிப்பது குறித்துப்
பேச்சு நடத்தப்பட்டுவருகிறது.

உதாரணமாக அமெரிக்காவின் ‘பைசர் பயோஎன்ரெக்’ தடுப்பு மருந்து அமெரிக் காவின் புலமைசார் சொத்துரிமைக் காப்பீட்டைக் கொண்டுள்ளது. அதனை வேறு நாடுகள் தங்கள் தொழிற்சாலை களில் தயாரிப்பதை, விநியோகிப்பதை
அது கட்டுப்படுத்துகிறது.மருந்து ஒன்றைத் தயாரிக்கும் நிறுவனம் அதன்
காப்புரிமையை இருபது ஆண்டுகள் வரை தனதாக்கிக் கொள்ளலாம்.

காப்புரிமையைத் தற்காலிகமாகவோ அன்றி நிரந்தரமாகவோ நீக்குவதை
தடுப்பூசித் தயாரிப்பாளர்கள் எதிர்த்து வருகின்றனர்.

படம் :Parc des expositions (porte de Versailles) அரங்கில் இராணுவத்தின் உதவியோடு திறக்கப்பட்டுள்ள பிரமாண்டமான தடுப்பூசி மையம்.

குமாரதாஸன். பாரிஸ்.
06-05-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here