வரும் கோடை விடுமுறைக் காலம் முகக்கவசம் இன்றி நடமாட வாய்ப்புண்டு; பிரான்ஸ் அமைச்சர் நம்பிக்கை!

0
641

போதுமான எண்ணிக்கையானோர் தடுப்பூசி ஏற்றிக்கொண்டால் வரும் கோடை விடுமுறைக் காலப்பகுதியில்
மாஸ்க் அணியாமல் நடமாட முடியும்.

பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இவ்வாறு நம்பிக்கை
வெளியிட்டிருக்கிறார். அமெரிக்கா போன்ற சில நாடுகள் பொது இடங்களில்
கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்
என்ற விதிகளைத் தளர்த்தி வருகின்றன
அதுபற்றி ‘ஈரோப் 1′(Europe 1) தொலைக் காட்சி சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியது.

“அது பெரும்பாலும் கோடை விடுமுறை
காலத்தில் சாத்தியமாகும் என நம்புகி றேன். ஆனால் அதற்கு முன்பாக நாட்
டில் போதுமான எண்ணிக்கையான மக்கள் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர் களாக இருக்கவேண்டும்” – என்று அமைச்
சர் பதிலளித்தார்.

வைரஸ் தொற்றாளர்களின் எண்ணி
க்கை அடுத்த இரண்டு வாரங்களில்
நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் என்ற கணக்
கில் குறைந்துவிடும் என்பதை மதிப்பீடு கள் காட்டுகின்றன என்றும் சுகாதார அமைச்சர் கூறியிருக்கிறார்.

பிரான்ஸின் Alpes-Maritimes பிராந்தியத்
தில் ஏற்கனவே மாஸ்க் அணியும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

மாஸ்க்கை அகற்றும் நிலைமை அவ்வளவு விரைவில் ஏற்பட்டுவிடாது என்று எச்சரிக்கின்ற தொற்று நோயியலாளர்கள், மாறுபாடடைந்த
வைரஸ் திரிபுகளிடம் இருந்து பாதுகாப்
புப் பெறுவதற்காக நீண்ட காலம் – வருடக்கணக்கில் – மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம் நீடிக்கலாம் என்று
கூறிவருகின்றனர்.

🔵சுகாதாரப் பாஸ்

இதேவேளை –

தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு
தற்காலிக டிஜிட்டல் பாஸ் ஒன்றை நடை
முறைப்படுத்தும் திட்டத்துக்கு அறிவியல்
ஆலோசனைச் சபை(le Conseil scientifique) பச்சைக்கொடி காட்டியிருக்கிறது.

நாட்டு மக்கள் தொற்றுக்கு மத்தியில் சில நாளாந்த நடவடிக்கைகளில் பாதுகாப் புடன் ஈடுபடுவதற்கு வசதியாக “தற்காலி
கமாக” டிஜிட்டல் சுகாதாரப் பாஸ் (pass sanitaire) ஒன்றை நடைமுறைப் படுத்தலாம் என்ற தனது அபிப்பிரா யத்தை அறிவியல் ஆலோசனைச் சபை அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளது.

சுகாதாரப் பாஸ் நடைமுறையை வரும்
ஜூன் மாதம் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.
04-05-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here