தனிப்பட்ட வதிவிடத்தை மெருகூட்ட தவறாக நிதி பெற்றாரா? சிக்கலில் பிரிட்டிஷ் பிரதமர்!

0
548

பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன்
தனது தனிப்பட்ட சொகுசு மாடிக்குடியி
ருப்பை மெருகூட்டுவதற்காக முறைகே
டாக நிதி நன்கொடை பெற்றாரா?

இவ்வாறு ஒரு புதிய சிக்கலில் பிரதமர் மாட்டிக் கொண்டுள்ளார் என்ற தகவலை
இங்கிலாந்து ஊடகங்கள் வெளியிட்டுள்
ளன.

“11 டவுனிங் வீதி” முகவரியில் பிரிட்டிஷ்
பிரதமரின் தனிப்பட்ட சொகுசு வதிவிடம்
அமைந்துள்ளது. நாட்டில் முதல் தரமான அந்த வதிவிடத்திலேயே பொறிஸ் ஜோன்சன் தனது துணைவியாருடன்
வசித்து வருகிறார். அதனைப் புதுப்பித்து
மெருகூட்டும் வேலைகளுக்காக நிர்ணயி
க்கப்பட்ட பராமரிப்புச் செலவுத் தொகை
யை விடப் பலமடங்கு நிதியை பிரதமர் பயன்படுத்தி உள்ளார் என்று சந்தேகிக் கப்படுகிறது. அதற்கான ஆதாரங்களை அரச செலவுகளைக் கண்காணிக்கும் குழு ஒன்று கண்டறிந்துள்ளது.

வதிவிட ஆடம்பர மெருகூட்டலுக்காக
மொத்தம் £200,000 பவுன்ஸ் செலவு செய்
யப்பட்டுள்ளமைக்கு ஆதாரங்கள் இருக்
கின்றன என்று கூறப்படுகிறது. ஆனால்
நான்கு படுக்கை அறைகள் கொண்ட
அந்த மாடிக் குடியிருப்பைத் திருத்தவோ
தளபாடங்களை வாங்கவோ ஆண்டு
தோறும் பிரதமருக்கு ஒதுக்கப்டுகின்ற
நிதி £30,000 பவுன்ஸ் மட்டும்தான்.

எஞ்சிய செலவுத் தொகையைப் பிரதமர்
எங்கிருந்து, எவ்வாறு பெற்றுக் கொண்
டார்? அது கணக்குக் காட்டப்படாத ரகசிய நிதிஅன்பளிப்பா? இவ்வாறான கேள்வி கள் அரசியல் தரப்புகளில் கிளப்பப்பட்டு அவை பிரதமர் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளன.

“இந்த விவகாரத்தில் குற்ற முறைகேடு அல்லது முறைகேடுகள் இடம்பெற்றிரு
க்கலாம் எனச் சந்தேகிப்பதற்கு நியாய
மான காரணங்கள் உள்ளன” என்று நிதி
மோசடிகளைக் கண்காணிக்கும் குழு
ஒன்று தெரிவித்துள்ளது. பூர்வாங்க
விசாரணைகளையும் அது தொடக்கி
உள்ளது.

பிரதமர் தனது தனிப்பட்ட நிதியில் இருந்தே செலவுக்கான பணத்தைப்
பயன்படுத்தினார் என்று அவரது அரசுப்
பிரமுகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
பிரதமரும் அதே கருத்தையே வெளியிட்
டிருக்கிறார்.

(படம் :11,டவுனிங் வீதி வதிவிட வாயில்)

குமாரதாஸன். பாரிஸ்.
28-04-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here