
பிரான்ஸில் நடைமுறையில் இருக்கும்
சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்து
கின்ற கால அட்டவணை தொடர்பான விவரங்களை அரசுத் தலைவர் மக்ரோன் பெரும்பாலும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு வெளியிடு
வார்.
இன்று நடைபெற்ற சுகாதாரப் பாதுகாப் புச்சபைக் கூட்டத்தின் முடிவில் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் (Jean Castex) இத்தக வலை வெளியிட்டிருக்கிறார்.
பொது முடக்கக் கட்டுப்பாடுகளில் இரு
ந்து நாட்டை விடுவிக்கும் “படிப்படியான”
“பல கட்டங்கள்” கொண்ட விவரமான
அட்டவணையை அதிபர் வெளியிடவுள்
ளார். சுகாதார நெருக்கடியில் இருந்து நாட்டை இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டுவருகின்ற முயற்சிகளில் அது ஒரு மைல் கல்லாக இருக்கும்.
மேற்கண்டவாறு பிரதமர் இன்று பகல்
இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில்
குறிப்பிட்டார். முதல் கட்டத் தளர்வுகள்
மே 3 ஆம் திகதியை ஆரம்பமாகக் கொண்டு ஜூலை மாதம் வரையான காலப்பகுதிக்குள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“நாட்டில் தொற்று நிலைவரம் இன்னமும்
குறையவில்லை. ஆனாலும் அது ஒரு
சீரான வீழ்ச்சியில் செல்வது தெரிகிறது.
-என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தேவையான நேரத்தில் புதிதாக கட்டுப்பாடுகளை அமுல்செய்வதற்கு அனுமதிக்
கின்ற சுகாதாரச் சட்டமூலத்தை அரசு
வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில்
சமர்ப்பிக்க உள்ளது. கொரோனா கட்டுப்
பாடுகளில் இருந்து நாட்டை விடுவிக்கின்ற வழிமுறைகள் அச் சட்ட மூலத்தில் உள்ளடங்குகின்றன.
குமாரதாஸன். பாரிஸ்.
28-04-2021