தொடருந்துப் பாதை அருகே பெரும் தீ: பாரிஸ் RER B சேவைகள் தடை!

0
350

பாரிஸ் புறநகரான Aubervilliers (Seine Saint-Denis) பகுதியில் அமைந்திருந்த களஞ்சியத் தொகுதி ஒன்றில் இன்று காலை பெரும் தீ மூண்டது. இதனால் RER B ரயில் சேவைகள் சில மணிநேரமாகத் தடைப்பட்டுள்ளன.A86 நெடுஞ்சாலையி
லும் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்
பட்டுள்ளது.

சுமார் 4ஆயிரம் சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட பாரிய களஞ்சியத்திற்கு மிக
அருகிலேயே ரயில் பாதைகள் அமைந்
துள்ளன. இதனால் பாதுகாப்புக் கருதி
சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டன என்று போக்குவரத்து சேவை நிறுவனம்
(SNCF) தெரிவித்துள்ளது.Gare du Nord – Charles-de-Gaulle 2 / Mitry ஆகிய மார்க்கங்
களிலேயே சேவைகள் தடைப்பட்டுள்ளன.
தீவிபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.

களஞ்சியத்தில் இருந்து கரும் புகைமண்
டலம் மேலெழுவதை பலரும் படங்களாக
இணையத்தில் பகிர்ந்துள்ளனர். Seine-Saint-Denis பகுதியில் களஞ்சியங்
களில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றன.

குமாரதாஸன். பாரிஸ்.
16-04-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here