அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் சில விதிகளை அரசியலமைப்பிற்கு விரோதமாக அறிவிக்கக் கோரும் சிறப்பு மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன் றம் இன்று முடிவுக்கு கொண்டுவந்தது.
அதன்படி, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர் பான உச்சநீதிமன்றத்தின் விளக்கம் அடுத்த சில நாட் களில் சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். அத்துடன் குறித்த மனுக்கள் இன்று 5 ஆம் திகதி திங்கட் கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட போது, சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தனது உரையை நிறைவு செய்தார்.குறித்த திருத்தத்திற்கு எதிராக 39 மனுக்களும், 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக ஆளும் கட்சியால் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் ஒக்டோபர் 13 ஆம் திகதிக்குள் சபாநாயகரிடம் முன்வைக்கப்படும்.20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக் களைப் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் உயர் நீதிமன்றினால் இந்த குழு நியமிக்கப்பட்டிருந்தது.
குறித்த நீதிபதிகள் குழுவில் புவனெக அலுவிஹார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர் தன, விஜித் மலல்கொட ஆகி யோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவால் இன்று விசாரணைக்கு வந்தன.குறித்த திருத்த சட்டத்தை மூன்றில் இரண்டு பெரும் பான்மை அல்லது பாராளு மன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என மனுதாரர்கள் கோரியுள்ளனர்.