தடைகளை உடைத்து சிவாஜிலிங்கம் செஞ்சோலை நினைவேந்தல்!

0
728

இன்று செஞ்சோலை படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் வள்ளிபுனம் பகுதியில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. ஆனால் , பொலிஸார் தடை விதித்தார்கள் ஏற்பாட்டாளர்கள் சிலரை அழைத்து கைது செய்வோம் என எச்சரிக்கை செய்தார்கள் . இதனால் கடந்த சில வருடங்களாக நினைவு நிகழ்வு இடம்பெறும் இடைக்கட்டு சந்தி செஞ்சோலை படுகொலை வளைவு அமைந்துள்ள இடத்தில் யாரும் அஞ்சலி செய்யவில்லை அந்த இடம் பொலிஸாராலும் இராணுவத்தினராலும் புலனாய்வாளர்களாலும் நிறைந்து இருந்தது . அந்த இடத்தில நினைவு நிகழ்வு செய்ய முடியாது உள்ளே சென்று வளாகம் அமைந்திருந்த பகுதியில் செய்யுங்கள் என்பதே பொலிஸாரின் வேண்டுகோள்.

ஆனால் மக்கள் பலர் அங்கே கூடியிருந்தார்கள் ஆனால் எல்லோரும் பொலிஸாருக்கு பயந்து பொலிஸார் சொன்ன இடத்துக்கே சிலர் சென்றார்கள் அங்கேயும் இராணுவம் பொலிஸ் புலனாய்வாளர்கள் சுற்றி சுற்றி நோட்டமிட புகைப்படம் எடுத்து அச்சுறுத்திக்கொண்டிருக்க அஞ்சலித்தார்கள் சில அரசியல் வாதிகளும் பொலிஸ் சொன்ன இடத்துக்கே சென்றார்கள் .

சற்று நேரத்தில் ஒரு வாடகை வான் வந்தது அதிலிருந்து சிவாஜிலிங்கம் ஒரு வாழைக்குற்றியுடனும் சில இளைஞர்கள் கொல்லப்பட்ட மாணவிகளின் படங்களை தாங்கிய பதாதைகளுடனும் இறங்கினார்கள் . பொலிஸார் நிகழ்வை நாடாத்த விடாது தடுத்த இடத்தை நோக்கி சிவாஜிலிங்கம் சென்றார் வாழை குற்றியை நாட்டி விட்டு மண் சட்டியை மேலே வைத்து விட்டு விளக்கேற்ற தயாரானார் பொலிஸார் , புலனாய்வாளர்கள் சூழ்ந்து கொண்டனர் நிகழ்வை செய்ய முடியாது இதிலே என்றனர். இதில் தான் நாம் கடந்த வருடங்களாக நினைவேந்தல் செய்கின்றோம் இதில்தான் நினைவு வளைவு உள்ளது இறந்த எனது உறவுகளை நினைவுகொள்வதை தடுக்கும் உரித்து உங்களுக்கு கிடையாது உயிர் நீர்த்த உறவுகளை நினைவில் கொள்ளும் உரிமைய விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறி தீபம் ஏற்றினார்.

இராணுவத்துக்கும் ,பொலிஸாருக்கும் ,புலனாய்வாளர்களுக்கும் பயந்து அஞ்சலிக்க முடியாது அருகிலிருந்த கடைகளுக்குள் ஒதுங்கியிருந்த மக்கள் இறந்த மாணவிகளின் உறவினர்கள் துணிவோடு அஞ்சலி செலுத்த சிவாஜிலிங்கம் பின்னால் நின்றார்கள். அஞ்சலித்தார்கள்.

ஆனால் மாறாக கடந்த காலங்களில் இந்த நினைவு நிகழ்வை நடாத்த முண்டியடித்தவர்கள் விளம்பரம் போட்டவர்கள் எவரும் இன்று அங்கே இல்லை மக்கள் தமது உரிமைகளை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை ஆனால் துணிவோடு வழிநடத்த துணிவான தலைமைகள் தான் இல்லை . பலருக்கு சிவாஜிலிங்கம் ஒரு கோமாளியாக தெரியலாம் ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து வாடகைக்கு வான் / ஆட்டோ பிடித்து நீரிழிவு நோயால் புண்ணாகி போன கால்களுடன் தேசத்தின் எல்லைகளுக்கு எல்லாம் சென்று அடக்கு முறைகளை உடைத்தெறிவேன் எங்கு மக்களுக்கு தடைகள் ஏற்படுத்த படுகிறதோ அங்கு அத்தனை தடைகளையும் அடித்து நொறுக்குவேன் என்று முழங்கும் சிவாஜிலிங்கம் ( கள்) தான் தற்போது ஏற்பட்டிருக்கின்ற எமது அரசியல் சூழலுக்கு தேவை . கடந்த ஐந்து வருடம் பணிந்து குனிந்து நீங்கள் செய்த அரசியல் தான் எம்மை இங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறது.

கைது செய்யபடுவேன் என தெரியும் , விசாரணைக்கு அழைப்பார்கள் என தெரியும் நாலாம் மாடிக்கும் போக வேண்டி வரும் எனவும் தெரியும் ஆனால் சிவாஜிலிங்கம் தடைகளை உடைக்க தவறுவதில்லை

அடக்கு முறைகளுக்கு எதிராக குனிந்து போகாமல் நிமிர்ந்து நில்லுங்கள்.

(Kumanan Kana)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here