வடக்கு மாகாண சபைக்குரி­ய நிதியை அர­சாங்கம் தாமே செலவு செய்­கின்­றது : விக்கி­னேஸ்­வரன்

0
178

viki-3-680x365வடக்கு மாகாண சபைக்கு நிதியை வழங்­கு­வ­தாகக் கூறிக்­கொண்டு அர­சாங்கம் அந்த நிதியை தாமே செலவு செய்­கின்­றது. இதனை விளங்­கிக்­கொள்ள முடி­யாத எமது மக்கள், நீங்கள் என்ன செய்­கின்­றீர்கள் என எம்­மிடம் கேட்­கின்­றனர். இதனால் நாம் மிகவும் மன­வ­ருத்­த­ம­டைந்­துள்ளோம் என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்தின் ஏற்­பாட்டில் இந்­திய றோட்­டரிக் கழ­கங்­களால் வாழ்­வக மாண­வர்­க­ளுக்கு உதவி வழங்கும் நிகழ்வு அண்­மையில் நடை­பெற்­ற­பொ­ழுது அந்த நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

இன்று வழங்­கப்­பட்­டுள்ள உத­விகள் மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் வழங்­கப்­பட்­டுள்­ளன. இறைவன் நல்­ல­வர்­க­ளை­யெல்லாம் பிரச்­சி­னை­க­ளையும் முரண்­பா­டு­க­ளையும் கலந்தே படைத்­துள்ளான்.

இதனை நிவர்த்தி செய்ய வேண்­டு­மாயின் இருப்­பவர் இல்­லா­த­வர்­க­ளுக்கு பகிர்ந்து வழங்­கு­வதன் மூல­மாக நல்­ல­தாக தீர்வை எட்ட முடியும். கையை மடக்­காது உள்­ளதை எடுத்து உண்­ணுங்கள் எனப் பாண்­ட­வர்­களும் கௌர­வர்­களும் இருந்த சபையில் கூறப்­பட்­டது.

யாருமே உண்ண முடி­யா­த­போது அபி­மன்யு கையை நீட்டி உணவை எடுத்து கௌரவர் பக்­கத்தில் இருந்த ஒரு­வ­ருக்கு கொடுத்த பொழுது அனை­வரும் உணவை உண்­டனர். இத­னையே இன்று றோட்­டரிக் கழ­கமும் செய்­துள்­ளது.

இதற்குப் பெரும் துணை­யாக இந்­தியத் தூத­ரகம் செயற்­பட்­டமை பாராட்­டுக்­கு­ரி­யது. இந்­திய அரசின் திட்­டப்­படி வட­மாகாண சபை நிறு­வப்­பட்­டுள்ள போதிலும் அதற்குப் போதிய அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை. இது­போன்­ற­தொரு நிலையே நிதி விட­யத்­திலும் காணப்­ப­டு­கின்­றது.

எனவே தொப்புள் கொடி உற­வு­களின் உதவியுடன் வேண்டியதைச் செய்து தருவதாக நாம் எமது மக்களுக்கு தெரிவித்து வருகின்றோம். அந்த வகையிலான ஒரு தீர்வே தற்பொழுது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here