பாதிக்கப்பட்டவர்களே தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர் : அனந்தி சசி­தரன்

0
642

Ananthi-sasitharanபாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கே தொடர்ந்தும் பாதிப்­புக்கள் ஏற்­ப­டு­கின்­றன. இந்த மக்­களின் வாழ்­வா­தார மேம்­பாட்­டிற்கு மாகாண சபையும் புலம்­பெ­யர்ந்து வாழு­வோரும் தொடர்ந்தும் உத­வி­களை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வட­மா­காண சபை உறுப்­பினர் திரு­மதி அனந்தி சசி­தரன் தெரி­வித்தார்.

யாழ்.ஊடக அமை­யத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

போரால் பாதிக்­கப்­பட்ட மக்­களே இயற் கை அனர்த்­தங்­க­ளி­னாலும் தொடர்தும் பாதிப்­புக்­களை எதிர்­கொண்­டுள்­ளனர். இம்­மக்­களின் பாதிப்­புக்­களை கருத்தில் எடுத்து வட­மா­காண சபை ஊடாக உத­வி­களை வழங்க முன்­வர வேண்டும்.

மேலும் எமது மக்­களின் வாழ்­வா­தார மேம்­பாட்­டிற்கு புலம்­பெ­யர்ந்­த­வர்­களும் உத­வி­களை வழங்க வேண்டும்.

இந்த மக்­க­ளுக்­கான உத­வி­களை வழங்­கு­வ­தற்கு புலம்­பெ­யர்ந்­த­வர்­க­ளுக்கு இங்கு எந்தத் தடையும் இல்லை. எமது மக்­க­ளுக்கு நேர­டி­யா­கவே உத­வி­களை வழங்க முடியும். எனவே உத­வி­களை நேர­டி­யா­கவே வழங்­கு­வ­தற்கு புலம்­பெ­யர்ந்­த­வர்கள் முயற்­சிக்க வேண்டும். அந்த உத­வி­களை தவ­றா­ன­வர்­க­ளிடம் கொடுத்து ஏமாந்­து­விடக் கூடாது.

மேலும் இப்­ப­கு­தியில் அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்ளும் பொழுது வீதி­க­ளையும், கால்­வாய்­க­ளையும் மக்கள் பாதிக்­காத வகையில் வெள்ளம் வடிந்­தோடக் கூடி­ய­தாக அமைத்­தி­ருக்க வேண்டும். எமக்குப் பொறி­யியல் ரீதி­யான அறிவு இல்­லா­வி­டினும் நாம் அவ்­வாறு செயற்­பட்­டி­ருந்தால் இன்று வெள்ள அனர்த்­தங்­களைத் தவிர்த்­தி­ருக்­கலாம்.

அத்­துடன் மத்­திய, மாகாண அர­சு­களும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உதவிகளை வழங்குவதில் பின்னடித்து வருகின்றன. எனவே மக்களின் நலன்களைக் கருத் திற்கொண்டு புலம்பெயர்ந்தவர்கள் உதவிக ளைத் தடையின்றி வழங்க வேண்டும் என் றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here