
கிராண்ட்பாஸ் ஹேனமுல்ல வீட்டுத்திட்டத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
இன்று (26) காலை 8.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்து கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
மரணமடைந்தவர், ஹேனமுல்ல வீட்டு திட்டத்தைச் சேர்ந்த 32 வயதான தினேஷ் எரங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் ‘ப்ளூமெண்டல் சங்க’ என அழைக்கப்படும், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபருக்கு தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
குறித்த நபர் மற்றுமொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் வந்து, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிராண்ட்பாஸ் பொலிசார் மேலதிக விசாரணைகள மேற்கொண்டுள்ளனர்.