இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளில் 60 பேருக்கே உரிமம்: கையளித்தார் மைத்திரிபால!

0
113
maithri_jaffna_visit_004வளலாய் மற்றும் வசாவிளான் பகுதிகளில் 25 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட 430.6 ஏக்கர் காணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இன்று யாழ்.வருகை தந்த ஜனாதிபதி வளலாய் பிரதேசத்தின் 233 ஏக்கர் காணிகளையும், வசாவிளான் கிழக்கு பகுதியில் 197.6 ஏக்கர் காணி  உறுதிப்பத்திரங்களை அவற்றின் உரிமையாளர்கள் 60 பேருக்கு இன்று முதற்கட்டமாக வழங்கி வைத்தார்.
மேலும் குறித்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, காணி அமைச்சர் குணரத்ன,மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், வடமாகாண முதலமைச்சர்
சி.வி. விக்னேஸ்வரன் ,யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ,மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here