எமது பிரச்சினைகளைத் தீர்க்க மனமில்லை. தருவோம் தருவோம் என்பார்கள் ஆனால் தரமாட்டார்கள் !

0
600

பெரும்பான்மை அரசுகள் எந்தக் காலத்திலும் எமது உரித்துக்களை முழுமையாகத் தரப்போவதில்லை என்பதே எனது கணிப்பு. தருவதாகக் கூறுவதெல்லாம் பாசாங்கு. தருவதாக இருந்தால் எம்முடைய வாக்கின் நிமித்தம் பதவிக்கு வந்த இன்றைய அரசு பதவிக்கு வந்த உடனேயே எமது பிரச்சினைகளைத் தீர்த்திருக்கும். தீர்க்க மனமில்லை. தருவோம் தருவோம் என்பார்கள் ஆனால் தரமாட்டார்கள்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.வடக்கு முத­ல­மைச்­சால் வாரந்­தோ­றும் அனுப்­பி­வைக்­கப்­ப­டும் வாரத்­துக்­கொரு கேள்வி பதில் அறிக்­கை­யில் வடக்கு மக்­க­ளுக்கு அர­சி­டம் இருந்து கிடைக்­கும் உத­வி­களை நீங்­கள் புறக்­க­ணிப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றதே? அதற்கு உங்­கள் விளக்­கம் என்ன என்ற கேள்­விக்­கான பதி­லி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளார்.
பணம் சம்­பா­திக்­க­லாம் என்று இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளில் ஈடு­பட்­டால் எமது மக்­க­ளும் அவர்­க­ளின் வாரி­சு­க­ளுமே காலக்­கி­ர­மத்­தில் பாதிக்­கப்­ப­டப் போகின்­ற­வர்­கள் என்­பதை நாம் உணர்ந்து செய­லாற்ற வேண்­டும். அரசு வரு­மா­னம் ஈட்­டு­தலை மட்­டுமே ஒரே­யொரு குறிக்­கோ­ளாக வைத்து சில தரு­ணங்­க­ளில் செயல்த்­திட்­டங்­களை வட­மா­கா­ணத்­துக்கு வகுக்­கின்­றார்­கள். அது தவறு.
எமது சுற்­றுச் சூழல், சீதோஷ்ண நிலை, கலை கலா­சா­ரப் பின்­னணி, எமது வாழ்க்கை முறை, எமது எதிர்­பார்ப்­புக்­கள் போன்ற பல­தை­யும் கணக்­கில் எடுத்தே இவற்றை வகுக்க வேண்­டும். இதற்­கா­கத்­தான் சட்­டம் பல­வி­த­மான அறிக்­கை­க­ளைக் கோரி நிற்­கின்­றது. சுற்­றுச் சுழல் அறிக்கை, கடற்­க­ரைப் பாது­காப்பு திணைக்­கள அறிக்கை என்ற பல­தை­யும் சட்­டம் எதிர்­பார்க்­கின்­றது. எம்­ம­வர் இவற்­றை­யெல்­லாம் புறக்­க­ணித்­துத் தமக்­குத் தனித்­து­வ­மா­கக் கிடைக்க இருக்­கும் நன்­மை­களை முன்­வைத்தே தீர்­மா­னங்­களை எடுத்து வந்­துள்­ளார்­கள் போலத் தெரி­கின்­றது.
பதவி இருந்­தால் எதை­யும் செய்­ய­லாம் என்ற தவ­றான அபிப்­பி­ரா­யத்தை நாங்­கள் இனி­யே­னும் நீக்­கிக் கொள்ள வேண்­டும். பின்­பற்றி நடக்­கவே சட்­டம் என்­றொன்று உண்டு. செல­வைக் குறைக்க சில ஒப்­பந்­தக்­கா­ரர்­கள் குறை­பாட்­டு­டன் பள்­ளிக் கூடக் கட்­ட­டங்­க­ளைக் கட்டி எழுப்­பு­கின்­றார்­கள். சில வரு­டங்­க­ளில் அவை பழு­த­டைந்து வீழ்ந்து சில நேரங்­க­ளில் குழந்­தை­க­ளின் உயிர்­க­ளை­யும் பறித்து விடு­கின்­றன.
நாம் வருங்­கா­லத்தை யோசிக்­காது உடனே கிடைக்­கும் நன்­மை­களை மட்­டும் பார்த்­தோ­மா­னால் அது பல சிக்­கல்­களை எமக்கு உண்­டாக்­கும். அரச உத­வி­களை நாங்­கள் இன்­னொரு கண்­கொண்­டும் நோக்க வேண்­டி­யுள்­ளது. பெரும்­பான்மை அரசு ஏதோ ஒரு நிறு­வ­னத்­தின் பணத்தை எமக்­குச் செல­வ­ழிக்­கவே முன்­வ­ரும். உதா­ர­ணத்­துக்கு ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யின் பணத்­தைத் தரு­வ­தா­கக் கூறு­வார்­கள். அவர்­க­ளுக்கு அந்­தப் பணம் திருப்­பிக் கொடுக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது என்று கூறி தாம் எமக்­கா­கக் கடன்­பட்­டுள்­ள­தா­கக் கூறு­வார்­கள்.
ஆனால் எமது உரி­மை­கள் எவற்­றை­யுந்­தர மறுப்­பார்­கள். ஆகவே தர­வ­ரு­ப­வர்­க­ளின் தானத்­தின் தாற்­ப­ரி­யங்­களை நாம் புரிந்து கொள்ள வேண்­டும். எமது உரித்­துக்­க­ளைத் தராது விடுத்து எமக்கு பொரு­ளா­தார உத­வி­கள் பல­தை­யும் அளித்து எம்­மைத் தம் கட்­டுப்­பாட்­டுக்­குள் நிரந்­த­ர­மாக வைத்­தி­ருப்­பதை எமது மக்­கள் விரும்­பு­கின்­றார்­களா என்­பதை முத­லில் நீங்­கள் ஆராய்ந்து பாருங்­கள், என்­னைப் பொறுத்த வரை­யில் எமது உரி­மை­களே முதன்­மை­யு­டை­யது. மற்­ற­வை­யா­வும் பின் செல்­பவை.
உத­வி­கள் பெற்­றுக்­கொண்­டால் நாம் அவர்­க­ளுக்கு கட­மைப்­பட்­டு­வி­டு­கின்­றோம். அதன் பின் சிங்­க­ளக் குடி­யேற்­றம், படை­யி­னர் தொடர் வசிப்பு, மீன்­பி­டி­யில் தென்­ன­வர் ஆக்­கி­ர­மிப்பு என்று பல­தை­யும் நிரந்­த­ர­மாக்கி விடு­கின்­றார்­கள். நாம் பேசா மடந்­தை­க­ளாக கைகட்டி வாய்­பு­தைத்து நிற்­கின்­றோம். எனி­னும் உத­வி­கள் எமக்­குத் தேவை. கட்­டா­யந் தேவை.
மனி­தா­பி­மா­னத்­து­டன் தரப்­ப­டும் உத­வி­களை நாம் பெற்­று­வ­ரு­கின்­றோம். மேற்­கூ­றிய எனது கருத்­துக்­களே நான் மத்­தி­யின் உத­வி­க­ளைப் புறக்­க­ணிக்­கின்­றேன் என்று கூற வைத்­தி­ருக்க வேண்­டும். நான் புறக்­க­ணிக்­க­வில்லை. நாம் பங்­கு­தா­ரர்­க­ளாக செயற்­றிட்­டங்­க­ளில் பங்­காற்ற வேண்­டும் என்ற எமது உரிமை சார்ந்த கருத்­துக்­களை வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றேன்.
அவ்­வ­ள­வு­தான். நாம்­மு­த­லில் எமது உரித்­துக்­களை உரி­ய­வாறு பெற்­றுக் கொள்­ளாது விட்­டால் காலக்­கி­ர­மத்­தில், உங்­க­ளுக்கு நாம் அது தந்­து­விட்­டோம் இது தந்­து­விட்­டோம் என்று கூறி மேலும் எது­வும் அர­சி­யல் ரீதி­யா­கத் தர­மு­டி­யாது என்று கைவி­ரித்து விடு­வார்­கள். அர­சு­களோ, தனி­யார்­களோ கொண்­டு­வ­ரும் சகல செயற்­றிட்­டங்­க­ளை­யும் உன்­னிப்­பா­கக் கவ­னித்தே நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றோம் என்­று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here