திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மாகாண சபையின் நட­வ­டிக்கை என்ன? பெய­ர­ள­வி­லேயே எதிர்க்­கட்­சித் தலை­வர் ஒரு­வர் இருக்­கின்­றார்!

0
204

வடக்கு மாகாண சபை ஆரம்­பிக்­கப்­பட்ட காலத்­தில் இருந்து இன்­று­வரை வடக்கில் இடம்­பெற்­று­வ­ரும் திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றம் தொடர்­பில் வடக்கு மாகாண சபை இது­வரை எடுத்த காத்­தி­ர­மான நட­வ­டிக்கை என்ன? வடக்கு மாகாண காணி அமைச்­சர் என்ற வகை­யில் முதலமைச்சர் இத்­த­கை­ய குடி­யேற்றத் திட்­டங்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்ய­வேண்­டும்.
இவ்­வாறு தெரி­வித்­தார் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் சுகிர்­தன்.
வடக்கு மாகாண சபை­யின் நேற்­று (25) முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கிவுல் வல­யம் என்ற பெய­ரில் திட்­ட­மிட்ட சிங்­கள குடி­யேற்­றம் இடம்­பெற்று வரு­கின்­றது. இதனை தடுக்­கக் கோரி கவ­ன­வீர்ப்பு பிரே­ர­ணை­யாக கொண்டு வந்து கருத்­துக்­களை முன்­வைக்­கும் போதே இதனை
தெரி­வித்­தார்.
‘தமிழ் மக்­க­ளின் காணி­களை மீள வழங்­காது சிங்­க­ள­வர்­க­ளுக்கு தாரை­வார்த்­தால் நாம் மீண்­டும் தூக்க வேண்­டிய நிலை ஏற்­ப­டும். வடக்கு மாகா­ணத்­தில் பல நிலங்­க­ளில் திட்­ட­மிட்ட
சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.
அந்­த­வ­கை­யில் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கிவுல் ஓயா திட்­டம் என்ற போர்­வை­யில் தமி­ழ­ரின் பாரம்­ப­ரிய இடங்­கள் அப­க­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன.
கிவுல் ஓயா திட்­ட­மா­னது சிறீலங்கா அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மகா­வலி அமைச்­ச­ராக இருந்­த­போதே அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இப்­போது மிக விரை­வாக அது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்­றால் எல்­லோ­ரும் இணைந்து திட்­ட­மிட்ட வகை­யி­லேயே செயற்­பட்டு வரு­கின்­ற­னர் என்று தெரி­கின்­றது’ என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் எச்­ச­ரிக்கை விடுத்­தார்.
இது தொடர்­பாக வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் லிங்­க­நா­தன், ‘‘கடந்த 1970ஆம் ஆண்­ட­ள­வில் ஆயி­ரம் ஏக்­கர் திட்­டம் ஊடாக பத்து தன­வந்­தர்­க­ளுக்கு நிலங்­கள் வழங்­கப்­பட்­டன. பின்­னர் ஏற்­பட்ட கல­வ­ரங்­க­ளின் இறு­தி­யில் போர்க் கைதி­க­ளான சிங்­கள மக்­கள் குடி ­யேற்­றப்­பட்­ட­னர்.
விடு­த­லைப்­பு­லி­கள் பலம் பொருந்­தி­யி­ருந்­த­போது அங்­கி­ருந்து இடம்­பெ­யர்ந்­தி­ருந்­த­வர்­கள் போருக்கு பின்­னர் தனிக்­கி­ரா­மங்­க­ளில் இருக்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர். இது இன்று நேற்று அல்ல. காலம் கால­மாக திட்­ட­மிட்டு நடை­பெற்­று­வ­ரும் குடி­யேற்­றம்.
இந்தப் பகு­தி­க­ளில் நடக்­கும் திட்ட மிட்ட சிங்­கள குடி­யேற்­றங்­கள் தொடர்­பாக வன்­னி­யில் உள்ள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் குரல் கொடுக்­க­வில்லை. காத்­தி­ர­மான நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை-’’ என்­றார்.
வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் தவ­நா­தன் தெரி­விக்­கை­யில், வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­களை சந்­திப்­ப­தற்கு என பெய­ர­ள­வி­லேயே இலங்­கைக்கு எதிர்க்­கட்­சித் தலை­வர் ஒரு­வர் இருக்­கின்­றார். வெறு­மனே அர­சி­யல் தீர்வு, இடைக்­கால அறிக்­கையை வைத்­துக் கொண்டு எதோ மாயா­ஜா­லாம், மந்­தி­ரம் நடக்­கப்­போ­கி­றது என கூறி­ வ­ரு­கின்­ற­னர்.
ஆனால் இங்கோ எமது நிலங்­கள் அப­க­ரிக்­கப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இலங்­கை­யின் எதிர்க்­கட்­சி­யி­னர் ஆளும் கட்­சி­யா­கவே செயற்­பட்டு வரு­கின்­ற­னர் என குற்­றம்­சாட்­டி­னார்.
மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளின் கருத்­துக்­களை கேட்­ட­றிந்த பின்­னர் இந்த விட­யத்தை அரச தலை­வர், தலைமை அமைச்­சர், எதிர்க்­கட்­சித்­த­லை­வர் சம்­பந்­தன் ஆகி­யோ­ருக்கு அனுப்பி வைப்­ப­தாக அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் அறி­வித்­தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here