வெள்ளவத்தையில் தொடருந்து மோதி இளம் குடும்ப பெண் பலி!

0
235

வவுனியாவை சேர்ந்த இளம் குடும்ப பெண் வெள்ளவத்தை தொடருந்து நிலையத்தில்  தொடருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார்.
வவுனியா தாண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த கமலவதனா
(கமலி) என்கின்ற 35 வயதுடைய குடும்ப பெண் நேற்று காலை கொழும்பு வெள்ளவத்தை தொடருந்து நிலையத்தில் தனது ஆறு வயதுடைய மகனுடன் ஒரு தொடருந்திலிருந்து மற்றுமொரு தொடருந்திற்கு மாறும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
மகன் தெய்வாதீ னமாக உயிர் தப்பியுள்ளார். மேலதிக விசாரணைகள் வெள்ளவத்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here