புங்குடுதீவு மகா வித்தியாலயத்துக்கு அருகில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்கும் புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தைச்சேர்ந்த திருலங்கன் கேஷனா (வயது 09) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி, பாடசாலைக்கு தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதன்போது, புங்குடுதீவு மகா வித்தியாலயத்துக்கு அருகில் கடற்படை முகாம்களுக்கு உணவு பொருட்களை விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் கவச வாகனம் (பவள்), மாணவி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானது. குறித்த விபத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.