இரண்டு லட்சம் சல்வடோர் மக்கள் அமெரிக்காவைவிட்டு வெளியேற டிரம்ப் உத்தரவு!

0
163

அமெரிக்காவில் வசித்து வரும், பணி புரிந்து வரும் 2 லட்சம் எல் சல்வடோர் நாட்டவர்களை அமெரிக்காவைவிட்டு வெளியேற்ற டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

2001 ஆம் ஆண்டு மத்திய அமெரிக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, மனிதாபிமான திட்டமாக அந்த பகுதியினருக்கு `தற்காலிமாக அடைக்கல அந்தஸ்து` அளிக்கப்பட்டு அவர்கள் அமெரிக்காவில் வசிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

அமெரிக்கா அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவைவிட்டு சல்வடோரியர்கள் வெளியேற வேண்டும். இல்லையென்றால் அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள்.

டிரம்ப் நிர்வாகம் முன்னதாக ஆயிரக்கணக்கான ஹைத்தியர்கள் மற்றும் நிராகுவே மக்களின் தற்காலிக அடைக்கல அந்தஸ்தை ரத்து செய்தது.

அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி வரை சல்வடோரியர்கள் அமெரிக்காவில் வசிக்க அனுமதி அளிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது. அதன் பின் அவர்கள் அமெரிக்காவைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது அமெரிக்காவில் தொடர்ந்து வசிக்க வேண்டுமென்றால் சட்ட உதவிகளை நாட வேண்டும்.

சல்வடோரியர்கள் அளித்து வரும் அடைக்கலம் அடுத்த பதினெட்டு மாதங்களுக்கு ரத்து செய்யப்படமாட்டாது என்று உள்நாட்டு பாதுகாப்பு துறை கூறியுள்ளது.

மேலும் அந்த துறை, “2001 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் விளைந்த நிலைமைகள் அந்த நாட்டில் இப்போது தொடரவில்லை.” என்றுள்ளது.

நீட்டிக்க வேண்டும்

தங்கள் நாட்டினருக்கு அமெரிக்கா அளித்த வந்த அடைக்கலத்தை நீட்டிக்க செய்யும் முயற்சியில் எல் சல்வடோர் அரசாங்கம் இறங்கி உள்ளது.

சல்வடோர் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூகோ மார்ட்டினஸ், தற்காலில அடைக்கல அந்தஸ்த்தை ரத்து செய்வது என்பது குடும்பத்தினரை பிரிப்பதற்கு ஒப்பானது என்றுள்ளார்.

தற்காலில அடைக்கல அந்தஸ்து பெற்றவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு அமெரிக்கா அரசு அந்நாட்டு குடியுரிமை வழங்கி உள்ளது. 200,000 அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் பெற்றோர்கள்தான் இப்போது நாடுகடத்தப்படும் நிலைக்கு ஆளாகி உள்ளார்கள் என்று ஹூகோ குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here