கொலை செய்த குற்றத்துக்கு இளைஞருக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு !

0
147


கொலை செய்த குற்றத்துக்கு 2 பிள்ளை களின் தந்தைக்கு தூக்குத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 07.12.2017 வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
2010 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி கிளிநொச்சி உதயநகரில் வேலுப்பிள்ளை சசிரூபன் (வயது 29) என்பவர் போத்தலால் குத்திக்கொலை செய்ய ப்பட்டார். அவரது சடலம் கல்லுக்கட்டி கிண ற் றில் போடப்பட்டிருந்தது.
இந்தக் கொலையைச் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் கரிகரன், தங்கராஜா இராஜேந்திரன் அல்லது ராசா ஆகிய இருவரும் மாங்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் எதிராக கிளிநொச்சி நீதவான் மன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன. அதன் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் பிணையில் விடுவி க்கப்பட்டனர்.
வேலுப்பிள்ளை சிவரூபனை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் எதிரிகள் இரு வருக்கு எதிராகவும் தண்டனைச் சட்டக் கோவை 296ஆம் பிரிவின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பெப்ரவரி 2011 இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
இரண்டாம் எதிரி மீதான குற்றச்சாட்டை வழக்குத் தொடுநரால் நிரூபிக்கமுடிய வில்லை. அதனால் இரண்டாம் எதிரியை மேல் நீதிமன்றம் விடுவித்தது.
முதலாம் எதிரி மீதான குற்றம் கண் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் நிரூபிக்க ப்படாவிடினும் சந்தர்ப்ப சூழல் சாட்சியங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதனால் கொலை செய்யும் பொது நோக் கோடு வேலுப்பிள்ளை சசிரூபனை கொலை செய்தார் என இனங்கண்டு முதலாம் எதிரியைக் குற்றவாளியாக நீதிமன்று அறிவிக்கிறது என்று மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
கொலைக் குற்றத்துக்காக ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் திகதியில் நிர்ணயிக்கப்படும் இடத்தில் குற்றவாளியின் உயிர் பிரியும் வரை தூக்கிலிடுமாறு இந்த மன்று பரிந்துரைக்கிறது என்று நீதிபதி தண்டனைத் தீர்ப் பளித்தார். இந்த வழக்கை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் நெறிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here