இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை !

0
116

கடந்த ஓராண்டு காலப் பகுதியில் இலங்கையில் ஒரு இலட்சத்து 76,248 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சிறீலங்கா சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் அது 42.93 சதவீதமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூன் , யூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 8 ஆயிரத்து 340 நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here