யோஷித்­த­விடம் மூன்று மணி­நேரம் விசா­ரணை!

0
265

மஹிந்த ராஜ­ப­க் ஷவின்  புதல்­வ­ரான யோஷித்த ராஜ­ப­க் ஷ­விடம் குற்றப் புல­னாய்வுப் பிரிவு  நேற்று 3 மணி நேரம் சிறப்பு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தது.   செஞ்­சி­லுவை சங்­கத்­தினால் யோஷித்­தவின் தாயா­ரான முன்னாள் முதற் பெண் மணி ஷிரந்தி ராஜ­ப­க் ஷவின் சிரி­லிய சவிய அமைப்­புக்கு வழங்­கப்­பட்­டு கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் முதல் 2015 ஜன­வரி 20 ஆம் திகதி வரை அந்த அமைப்பின் கட்­டுப்­பாட்டில் இருந்த (WP) KA-0642 எனும் டிபண்டர் வண்டி தொடர்பில் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன.
இதன் போது குறித்த டிபண்டர் வண்­ டியின் நிறம் மாற்­றப்­பட்­டமை தொடர் பில் ஏற்­பட்­டுள்ள சந்­தே­கங்­களை முன்­னி­றுத்தி குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விஷேட விசா­ரணைப் பிரிவு
தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­த­தா­கவும், விஷேட வாக்கு மூலம் ஒன்­றினை பதிவு செய்த பின்னர் யோஷித்த ராஜ­ப­க்ஷவை அங்­கி­ருந்து வெளி­யேறிச் செல்ல அனு­ம­தித்­த­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.
சிரி­லிய சவிய அமைப்பின் கீழ் இருந்த செஞ்­சி­லுவை சங்­கத்­தினால் வழங்­கப்­பட்ட டிபண்டர் வண்டி தொடர்பில் பிரத்­தி­யேக விசா­ரணை ஒன்று குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. குற்றப் புல­னா­யவுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்­னவின் நேரடி மேற்­பார்­வையில் அதன் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சுதத் நாக­ஹ­முல்ல, பிரதிப் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சானி அபே­சே­கர ஆகி­யோரின் நேரடி கட்­டுப்­பாட்டில் விஷேட விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்சித் முன­சிங்க தல­மை­யி­லான பொலிஸ் குழு­வி­னரால் இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.
இந் நிலையில் நேற்று முன் தினம் அது தொடர்பில் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த சிரி­லிய சவிய அமைப்பின் பொறுப்­பா­ள­ராக செயற்­பட்ட  மஹிந்­தவின் மனைவி ஷிராந்தி ராஜ­பக்ஷ குற்றப் புல­ன­யவுப் பிரி­வுக்கு அழைக்­கப்­பட்டார்.
குற்றப் புல­னா­யவுப் பிரிவின் அழைப்­புக்கு இணங்க அவர் நேற்று முன் தினம் காலை 9.30 மணிக்கு குற்றப் புல­ன­யவுப் பிரிவில் ஆஜ­ரானார். அவ­ரிடம் மூன்­றரை மணி நேரம் விசா­ரிக்­கப்ப்ட்­டது.
இந் நிலையில் நேற்று காலை 10.15 மணிக்கு குற்றப் புல­ன­யவுப் பிரிவில் ஆஜ­ரான யோஷித்த ராஜ­ப­க்ஷ­விடம் நண்பகலையும் நாண்டி பிற்பகல் 10.15 மணி தொடக்கம் 1.15 மணி வரையிலான 3 நேரம் விசாரணை நடாத்தப்பட்டது. இதனையடுத்து அவசியம் ஏற்படுமிடத்து மீள அழைப்பதாக கூறி யோசித்த விடுவிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here