வடக்கு மாகாணசபை தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி திருமாவளவன் ஆர்ப்பாட்டம்!

0
148


Thirumaவிடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே  ஆர்ப்பாட்டம் நடந்தது. இலங்கை வடக்கு மாகாணசபை தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தை தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் கோஷங்களை முழங்கினார்.

பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:–

இலங்கை அதிபர் சிறிசேனாவின் இந்திய பயணம் இந்தியா– இலங்கை உறவை வலுப்படுத்துவதை விட மார்ச் மாதம் ஐ.நா.சபையில் நடைபெற உள்ள போர்க்குற்ற விசாரணையை தள்ளிப்போடுவதற்காகத் தான் அவர் வந்துள்ளார். இதற்காக சிறிசேனா உலக தலைவர்களின் ஆதரவை பெற்று வருகிறார். அதன் அடிப்படையில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.

73175605ஐ,நா. விசாரணை முன்கூட்டியே நடந்தால் சிங்களர்களுக்கு எதிராக அமைந்து விடும் என்று சிறிசேனா பயப்படுகிறார்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் ராஜபக்சேவுடன் ஒப்பிடுகையில் சிறிசேனா எந்தவகையிலும் குறைந்தவர் அல்ல. வடக்கு கிழக்கு மாகானத்தில் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் ராணுவ முகாமை அமைத்து இருக்கிறார்கள்.

விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் அமைப்புகள் ராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியபோது அவர்களிடம் ராணுவத்தை விலக்கி கொள்வதாக சிறிசேனா கூறினார். அதே நேரத்தில் சிங்களர்களிடம் பேசும்போது, ராணுவத்தை விலக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவிக்கிறார்.

இது சிறிசேனாவிடம் இரட்டை வேடத்தை காட்டுகிறது. இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று குரல் கொடுத்தது அவர்தான். ஆனால் இப்போது போர்க்குற்ற விசாரணையை தள்ளிப் போடவும், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கு இந்திய அரசு துணை போகக்கூடாது. இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும். தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் இதனை வலியுறுத்த வேண்டும். வடக்கு மாகாண சபை தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here