உள்­ளூர் மீன­வருக்கு வழங்கப்பட்ட பகுதி தெற்கு மீனவர்களுக்கு ஒதுக்கப்பட்டதல்ல .

0
216

உள்­ளூர் மீன­வர்­க­ளின் வாடி அமைப்­புக்­காக வழங்­கப்­பட்ட பிர­தே­சம் தென்­னி­லங்கை மீன­வர்­க­ளின் கரை­வ­லைப்­பாட்­டுக்கு ஒதுக்­கப்­பட்ட பகு­திக்­குள் அடங்­க­வில்லை எனப் பிர­தேச செய­ லாள­ரி­னால் அரச நில அள­வை­யா­ள­ரின் அள­வீட்டு ஆவ­ணம் ஊடாக முல்­லைத்­தீவு நீதி­மன்­றின் கவ­னத்­துக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது.
முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கொக்­கி­ளாய் கடற்­க­ரை­யில் உள்­ளூர் மீன­வர்­க­ளின் பயன்­பாட்­டுக் ­கா­கப் பிர­தேச செய­லா­ள­ரி­னால் வழங்­கப்­பட்ட நிலம் தென்­னி­லங்கை மீன­வர்­க­ ளுக்­கான கரை ­வ­லைப்­பாட்­டுப் பகு­திக்­குள் அடங்­கு­வ­தால் குறித்த வாடி­யைத் தடை செய்­ய­வேண்­டும் எனக் கோரி 3 தென்­னி­லங்கை மீன­வர்­க­ளின் சார்­பில் நீரி­யல் வளத் திணைக்­க­ளம் கடந்த ஆண்டு முல் ­லைத்­தீவு நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருந்­தது.
மேற்­படி வழக்கு நேற்­றைய தினம் முல்­லைத்­தீவு மாவட்ட தீதி­மன்­றில் நீதிவான் சம்­சு­தீன் முன் ­னி­லை­யில் எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது.
இதன்­போது உள்­ளூர் மீன­வர் அமைப்­புக்­க­ளின் சார்­பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான அன்­ரன் புனி­த­ராஜ் , பரஞ்­சோதி, ரனேஸ்­வ­ரன், ராதிகா உள்­ளிட்­டோர் முன்­னி­லை­யா­னார்­கள்.
குறித்த வழக்­குத் தொடர்­பில் சட்­டத்­த­ரணி அன்­ரன் புனி­த­ராஜ் தெரி­விக்­கை­யில், தென்­னி­லங்கை மீன­வர்­க­ளின் கரை­வலை மீன்­பி­டிக்கு அனு­ம­திக்­கப்­பட்ட பகு­தியே தற்­போது உள்­ளூர் மீனவ அமைப்­புக்கு வாடி அமைப்­ப­தற்­காக வழங்­கப்­பட்­டுள்­ள­தாக நீரி­யல் வளத் திணைக்­க­ளத்­தி­னால் சுட்­டிக்காட்டப்பட்டிருந்தது.
இதன் பிர­கா­ரம் கடந்த நவம்­பர் மாதம் 15ஆம் திகதி இடம்­பெற்ற வழக்­கின்­போது மன்­றில் தோன்­றிய நீரி­யல் வளத் திணைக்­க­ளத்­தின் பிர­தி­நிதி, இந்­தப் பிர­தே­சங்­கள் ஜீ.பி.எஸ் தொழில்­நுட் ­பம் மூலம் அள­வீடு செய்­யப்­பட்­டுள்­ள­போ­தி­லும் யாரு­டைய பகு­தி­யில் அமைந்­துள்­ளது என உறு­தி­யா­கச் சொல்ல முடி­ய­வில்லை எனத் தெரி­வித்­தி­ருந்­தார். அவர் அவ்­வாறு தெரி­வித்­தது மட் ­டு­மன்றி எந்­த­வி­த­மான ஆவ­ணங்­க­ளும் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்க வில்லை.
இருப்­பி­னும் குறித்த வாடி தென்­னி­லங்கை மீன­வர்­க­ளின் பகு­தி­யில் அடங்­க­வில்லை என்­பதை அன்­றும் மன்­றின் கவ­னத்­துக்­குக் கொண்டு வந்­தி­ருந்­தோம். இதன் அடிப்­ப­டை­யில் இந்த வழக்கு நேற்றைய தினத்­துக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. நேற்று திணைக்­க­ளம் சார்­பில் மாவட்­டப் பிர­தி­நி­தி­யு­டன் கொழும்­புத் தலை­மை­யக நீரி­யல் வளத் திணைக்­கள அதி­கா­ரி­யும் மன்­றில் தோன்­றி ­னர். குறித்த வாடி­யா­னது தென்­னி­லங்கை மீன­வர்­க­ளின் பிர­தே­சத்துக்குள் தான் அடங்­கு­வ­தாக அவர்­கள் மன்­றில் தெரி­வித்­த­னர்.
இருப்­பி­னும் வாடி அமைந்­துள்ள பகுதி தென்­னி­லங்கை மீன­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட பகு­தி யில் இருந்து 325 மீற்­ற­ருக்­கும் அப்­பா­லேயே உள்­ளது எனப் பிர­தேச செய­லா­ள­ரி­னால், அரச நில அள­வை­யா­ளர் மேற்­கொண்ட அள­வீட்டு ஆவ­ணத்­தின் மூலம் மன்­றில் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­ தோடு அந்த அள­வீட்­டுப் பத்­தி­ர­மும் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.
அவ்­வாறு சமர்ப்­பிக்­கப்­பட்ட ஆவ­ ணத்தை மாகாண நில அள­வைத் திணைக்­க­ளப் பிர­தி­நிதி உறுதி செய்­தி­ருந்­தார். இவற்றை ஆராய்ந்த நீதிவான், நில அளவை அதி­கா­ரி­யின் அறிக்­கை­யின் பிர­கா­ரம் தெற்கு மீன­வ­ருக்கு ஒதுக்­கப்­பட்ட பிர­தே­சத்­துக்­கும் தற்­போது பிர­தேச செய­லா­ள­ரி­னால் வழங்­கப்­பட்ட இடத்­துக்­கும் இடை­யில் 325 மீற்­றர் இடை­வெளி உள்­ளது. அத­னால் கரை­வ­லைப் ­பாட்­டுக்­குத் தடை ஏற்­ப­டும் எனக் கூற­மு­டி­யாதே எனத் திணைக்­கள அதி­கா­ரி­க­ளி­டம் கூறி­னார்.
இதன்­போது கருத்து வெளி­யிட்ட அதி­கா­ரி­கள், நில அள­வைப் பத்­தி­ரம் தொடர்­பில் இது­வரை தெரி­யா­த­மை­யால் அது தொடர்­பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தா­கத் தெரி­வித்­த­னர். அதனை அடுத்த தவ­னை­யில் சமர்ப்­பிக்­கு ­மா­றும் அதன் பிர­கா­ரம் தீர்வை எட்­ட­மு­டி­யும் என­ வும் தெரி­வித்த நீதிவான் வழக்கை ஏப்­ரல் மாதம் 3ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்­தார்-­.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here