2015 ஆம் ஆண்டு ஜெனீவா பிரேரணையை முற்றாக நடைமுறைப்படுத்த சிறீலங்கா இணக்கம்!

0
169

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப் பட்ட பிரேரணையை முற்றாக நடைமுறைப்படுத்துவதற்கு சிறீலங்கா இணக்கம் தெரிவித் துள்ளது.
ஐரோப்பா – சிறீலங்கா ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் நல்லாட்சி, சட்டவாச்சி மற்றும் மனித உரிமை தொடர்பான செயற்பாட்டுக்குழுவின் கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட ஒன்றிணைந்த ஊடக அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த செயற்பாட்டுக் குழுவின் இரண்டாவது கூட்டம் நேற்றும் (13) இன்றும் (14) கொழும்பில் நடைபெற்றதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினர்கள்,சிறீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க , சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் சந்தித்துள்ளனர்.
இந்த குழுவினால் முன்வைக்கப்படுகின்ற மறுசீரமைப்புத் திட்டங்களை முன்னோக்கிச் செல்வதற்கு அரசியல் ரீதியாக அர்ப்பணிப்பு செய்வதாக இதன்போது சிறீலங்கா பிரதமரும் , சிறீலங்கா வெளிவிவகார அமைச்சரும் உறுதியளித்துள்ளனர்.
அத்தோடு 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப் பட்ட பிரேரணையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் இரண்டு தரப்பினரும் இணங் கியுள்ளனர்.
சிறீலங்கா அரசாங்கத்தின் மறுசீரமைப்பு பணிகளுக்கு நிதி அனுசரணையை வழங்குவதாக இதன் போது ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது.
இதேவேளை, 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்காக மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை கோரும் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here