வடக்கு முதல்வர் விக்கியை சந்தித்தனர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள்

0
266

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான தூதுக்குழுவின் தூதுவர் டுங்–லாய் மார்க் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.


வடக்கு முதல்வரின் காரியாலயத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில், வட மாகாணத்தின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதிவரை வடக்கில் தங்கியிருக்கவுள்ள குறித்த குழுவினர், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவில் முன்னெடுக்கப்படும் பல்வேறு திட்டங்களை பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை சிறீலங்கா அரசாங்கம் செயற்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here