அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு- மதுரை விழாக்கோலம் !.

0
147

யுக புரட்சி போல ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் நடைபெற்ற இளைஞர் புரட்சி, மத்திய, மாநில அரசுகளை அசைத்துப்பார்த்தது. ஜல்லிக்கட்டுக்காக சட்டத்தை இயற்ற வைத்தது. ஜல்லிக்கட்டு சட்டம் இப்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை (05.02.2017)நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. காலரி அமைக்கும் பணிகள், காளைகளை பதிவு செய்யும் பணிகள் களைகட்டியுள்ளன.


பாரம்பரியமாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பொங்கல், மாட்டுப்பொங்கல், காணுப்பொங்கல் நாளில் நடைபெறும். உச்சநீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தடை காரணமாக இந்த ஆண்டு தை திருநாளில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
அலங்கநால்லூர் – பாலமேடு பாரம்பரியம் மிக்க அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு முறையே பிப்ரவரி 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.ஆனால் போட்டிக்கான முன்னேற்பாடுகள் செய்ய கால அவகாசம் தேவை என்பதால்,ஜல்லிக்கட்டு போட்டிகளை வரும் 10ஆம் தேதிக்கு அலங்காநல்லூர் கிராம நிர்வாகம் தள்ளி வைத்துள்ளது. தடை விதிக்க மறுப்பு தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டதை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனையடுத்து முழுவீச்சில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அவனியாபுரத்தில் ஏற்பாடுகள் தயார் மதுரையில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஏற்கனவே அறிவித்தபடி பிப்ரவரி 5ஆம் தேதி நாளை நடைபெற உள்ளதால் இதற்கான முன்னேற்பாடுகள் அங்கு முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளக் கூடிய காளைகளை பதிவு செய்யும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் சுமார் 650 காளைகள் பதிவு செய்யப்பட்டன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள இன்றே கடைசி நாளாகும். சுமார் 800 காளைகள் வரை பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here