இந்தோனேசியாவில் 93 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணித்த படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலேசியாவில் இருந்து இந்தோனேசியாவிற்கு பயணித்த படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
தஞ்சுங் பேபாம் என்ற இடத்திற்கு பெரிய அலைகள் மற்றும் பலத்த காற்று வீசியதில் படகு மூழ்கியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
விபத்தை தொடர்ந்து ஹெலிகொப்டர் உதவியுடன் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை, 39 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தோரின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்ற வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.