பௌத்தர்கள் வாழும் இடத்திலேயே  புத்தர் சிலை  அமைக்கப்படவேண்டும்; ராஜித்த சேனாரட்ன!

0
332

puththar-1பௌத்தர்கள் வாழும் இடத்திலேயே  புத்தர் சிலை  அமைக்கப்படவேண்டும். பௌத்தர்கள்  இல்லாத இடத்தில்  புத்தர் சிலை அமைப்பதில் என்ன பயன் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான  ராஜித்த சேனாரட்ன கேள்வியெழுப்பினார்.

அரசாங்க தவகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்  எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே     ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு   வினவினார்.

செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளும் அமைச்சர் அளித்த பதில்களும் வருமாறு

கேள்வி:-  அண்மையில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட   புத்தர் சிலை அகற்றப்பட்ட விவகாரம் குறித்து ?

பதில்:- பௌத்தர்கள் வாழும் இடத்திலேயே  புத்தர் சிலை  அமைக்கப்படவேண்டும். பௌத்தர்கள்  இல்லாத இடத்தில்  புத்தர் சிலை அமைப்பதில் என்ன பயன்.   பௌத்த மதமும் புத்தரும் இதனை அனுமதிக்கவில்லை. அடுத்தவன்  தோட்டத்தில் சென்று எனது சிலையை அமைக்க முடியுமா? அதனால் இது தவறாகும்.

கேள்வி:- முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்  நன்றாகப் பேசிக்கொள்கிறார்களா?

பதில்:- மஹிந்த ராஜபக்ஷ என்னுடனும் பேசுவார், நான் அண்மையில் வெளிநாட்டுக்கு செல்லு முன்னரும்  என்னுடன் தொலைபேசியில் உரையாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here