பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 9 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வுகள் பிரான்சில் 01.11.2016 செவ்வாய்க்கிழமை ஆன்மாக்கள் தினத்தன்று லாக்குர்நெவ் மாநகரசபையின் ஏற்பாட்டில் முற்பகல் 11 மணிக்கும் மறுநாள் 02.11.2016 புதன்கிழமை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , லாக்குர்நெவ் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் பிற்பகல் 15.00 மணிக்கும் தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள லாக்குர்நெவ் பகுதியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
செவ்வாய்க்கிழமையன்று பொதுச்சுடரினை லாக்குர்நெவ் மாநகரசபை உறுப்பினர் அந்தோனி அவர்களும் புதன்கிழமையன்று பொதுச்சுடரினை லாக்குர்நெவ் தமிழ்ச் சங்கத் தலைவர் புவனேஸ்வரன் அவர்களும் ஏற்றிவைத்தனர்.
ஈகைச்சுடரினை, 08.11.2012 அன்று பிரான்சில் வீரமரணமடைந்த கேணல் பருதி அவர்களின் புதல்வியும், 12.10.1987 அன்று யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடிமோதலில் வீரச்சாவடைந்த லெப்ரினன்ட் அகிலனின் சகோதரனும், 03.08.2008 அன்று மன்னாரில் வீரச்சாவடைந்த லெப்ரினன்ட் தமிழ்பிரியாவின் சகோதரனும் ஏற்றிவைத்து மலர் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
நிகழ்வுரைகளும் இடம்பெற்றன. நிகழ்வுரைகளை லாக்குர்நெவ் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பிரான்சு தமிழர்ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் பாலசுந்தரம், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.சத்தியதாசன் ஆசிரியர் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிறைவுகள் நிறைவு கண்டன.
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு) (படங்கள்: யூட், நிக்சன்,பகீர்)