“யூரோ 2016” நேற்று முதல் கோலாகலமாக தொடங்கியது!

0
325

imageஉலக கால்பந்தாட்ட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த யூரோ 2016 போட்டிகள் நேற்று தொடங்கியது

ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நாடுகள் மட்டும் பங்கேற்கும் இந்த போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடந்த 1960ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.

இந்நிலையில் 15வது ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிகள் இன்று பிரான்சில் தொடங்குகிறது.

ஜூலை10-ந் திகதி வரை 31 நாட்கள் நடக்கும் கால்பந்தாட்ட போட்டிகள் பிரான்சின்10 நகரங்களில் நடைபெறுகிறது.

இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை சுமார்ரூ.2 ஆயிரம் கோடியாகும்.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.64 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்குரூ.37 கோடியும் பரிசாக கிடைக்கும்.

இதுதவிர பங்கேற்பு கட்டணம், ஒவ்வொரு வெற்றிக்கும் பல கோடி பரிசு மழை அளிக்கப்படும்.

ரொனால்டோ, ரூனி உட்பட முன்னணி வீரர்கள் விளையாட உள்ளதால் போட்டிகள் களைகட்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தை வென்று ஹாட்ரிக் சாதனை படைக்க காத்துக் கொண்டிருக்கிறது.

1984, 1998ம் ஆண்டுகளில் பிரான்சில் கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்ற போது அந்த அணியே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதால், உள்ளூர் ராசி கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

இதேபோன்று உலக சாம்பியனான ஜேர்மனி அணியும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் இதுவரை சாம்பியன் பட்டம் பெற்ற நாடுகள்

1960 – சோவியத் யூனியன்

1964 – ஸ்பெயின்

1968 – இத்தாலி

1972 – மேற்கு ஜெர்மனி

1976 – செக்கோஸ்லோவக்கியா

1980 – மேற்கு ஜேர்மனி

1984 – பிரான்ஸ்

1988 – நெதர்லாந்து

1992 – டென்மார்க்

1996 – ஜேர்மனி

2000 – பிரான்ஸ்

2004 – கிரீஸ்

2008 – ஸ்பெயின்

2012 – ஸ்பெயின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here