பிரான்சு – தமிழர் விளையாட்டுத் துறையின் உண்மை நிலை…!

0
2651


tvt lt (1)‘எமது எதிரியையும் அவனது நோக்கத்தையும் இனம் கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகிறார்கள் எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள். தமது சுயநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்குச் சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும்”
– தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்து –

அன்பார்ந்த விளையாட்டுக் கழகங்களுக்கும், ஆர்வலர், நலன்விரும்பிகள் அனைவருக்கும் வணக்கம்!
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை கடந்த பல ஆண்டுகளாக தமிழர் சார் சகல விளையாட்டுகளையும் சகல விளையாட்டுக் கழகங்களையும் இணைத்து அதற்கான பொது விதிகளுக்கமைய செயற்பட்டு வருகிறது. இதில் புலம்பெயர் வாழ் தமிழ் இளையோர்களின் உடல் – உள சார் நலன்களைக் கருத்திற்கொண்டு கட்டுக்கோப்பான உயர் விழுமியங்களைப் பேணும் வகையில் இயங்கி வருகிறது.
கடந்த சில மாதங்களாக தமிழர் விளையாட்டுத்துறையின் செயற்பாடுகளைக் குழப்பும் அல்லது முடக்கும் வகையில் அடையாளம் காணப்பட்ட சிலரினால் தமிழ்த்தேசியம் என்ற போர்வையில் நெருக்கடிகளும், இடையூறுகளும் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் தமிழர் விளையாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஈழத் தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனப் பிரதி நிதிகள் தெளிவான புரிதலும், விளக்கமும் இன்றி குழப்ப செயற்பாட்டில் இணைந்துள்ளனர். இதைப்பின்பற்றி ஈழத் தமிழர் துடுப்பெடுத்தாட்டச் சம்மேளனத்திலும் ஒருசில பிரதிநிதிகள் குழப் பத்தை விளைவிக்க முயற்சிக்கின்றனர். இந்த சிக்கல்களை சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு தமிழர் விளையாட்டுத்துறை பலமுறை பேசியும், கலந்துரையாடியும் வந்துள்ளது. இந்த சுமூக முயற்சிக்குப் பங்கம் வராது இருப்பதற்காக நாம் அமைதியாகவும், பொறுமையாகவும், மிகுந்த விட்டுக் கொடுப்புடன் இருந்தோம். இது அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்கும் இக்கட்டான நிலையை ஏற்படுத்தியிருந்தது என்பதை நாம் அறிவோம். ஆனால் எங்களது அமைதி முயற்சி கைகூடமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதையிட்டு நாம் சகல விளையாட்டுக் கழகங்களுடன் இந்நிலைப்பாட்டின் உண்மைத் தன்மையை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
கடந்த ஆண்டு (2015) டிசம்பர் மாதம் யாப்பின் அடிப்படையில் நடைபெற்ற ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவில் கடந்த காலங்களில் தமிழர் ஒருங் கிணைப்புக் குழுவிற்கு எதிராக போட்டிப் போலித் தேசிய அமைப்புகளை உருவாக்கியவர்கள் நீண்டகாலத்தின் பின் திட்டமிட்ட முறையில் சமுகமளித்திருந்தனர். இவர்களின் செயற்பாட்டால் விளையாட்டுக் கழகங்கள் குழப்பப்பட்டு, குழப்பமான புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது. கழகங்களின் விருப்பு வாக்குகளால் நிர்வாகம் தெரியப்பட்டதால் அதனை மதித்தும், எதிர்கால நன்மையைக் கருத்திற்கொண்டும், சம்மேளனமானது யாப்பு அடிப்படையில் சரியாக நடாத்த கழகங்கள் ஒத்துழைக்கும் என்ற நம்பிக்கையில் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத் தலைவர் எமது வரையறைக்கு உட்பட்டுச் செயற்படாது, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கும், அதனுடன் கருத்து முரண்பாடு கொண்ட குழுவின் நிர்வாக முரண்பாட்டுப் பிரச்சனையில் நேரடியாக முரண்பாடு கொண்ட குழுவினருடன் பக்கசார்பாக நடந்துகொண்டார். இவருடைய நடவடிக்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் யாப்பு விதிமுறைக்கு முரணாக காணப்பட்டது. இது விiயாட்டுத் துறையால் கண்டிக்கப் பட்டதுடன,; கழகங்களுக்கிடையே சிக்கல்களையும், அவநம்பிக்கையையும் தோற்றுவித்தது. இதன் அடிப்படையில் தலைவரை நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் நீக்கி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய தலைவர் தெரிவுசெய்யப்பட்டார். சம்மேளனத்தின் புதிய தலைவரின் தலைமையில் ஏற்பாடுசெய்யப்பட்ட மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுக்கிண்ண தொடக்க நாளான அன்று, அவரது வீட்டு வாசலில் இக்கும்பலால் மிலேச்சத்தனமாக கொலை செய்யும் நோக்கத்தோடு கூரிய ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டு, இன்றுவரை சிகிச்சை பெற்று வருவதும், அதேநாள் மைதானத்தில் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் உட்பட செயற்பாட்டாளர்கள் சிலர், கம்பிகொண்டு தாக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. இவை அனைத் தையும் பொறுமையுடன் வன்முறை எதிர்ப்புகளைக்காட்டாது, இந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய காவற்துறையை அணுகினோம். ஏனெனில், எமது இளைஞர்கள் வன்முறைகளில் ஈடுபடல் கூடாது என்ற பெரு நோக்கும், எம்மை வன்முறையில் இழுத்துவிட்டு எமது சமூக செயற்பாடுகளில் முடக்கம் எற்படுத்தாமலும் இருப்பதற்காகவே.
இதேவேளையில், விளையாட்டுத்துறை இணைப்பாளராக முரண்பாட்டுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டவர் உட்பட நால்வர் இங்கு நடைபெற்ற தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற் பாட்டாளர்களின் கொலைக் குற்ற முயற்சியில் சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் உத்தியோகப் பற்றற்ற முறையில் நடாத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சின் தமிழர் விளையாட்டுத் துறை எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது என்பதை இவ்விடத்தில் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் தற்பொழுது எவ்வித உறுதிப்பாடும் இல்லாமல் தமிழர் விளையாட்டுத் துறையின் இலட்சினைதாங்கி நிற்கும் துண்டுப்பிரசுரம் மாவீரர் நினைவு சுமந்த பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்காக அழைப்பை தாங்கி வெளிவந்துள்ளது. இது சட்டப்படியான ஒரு அமைப்பினை அவமதித்து, மக்களைக் குழப்பும் செயலாகும்.

இந்நிலையில் விளையாட்டுக் கழக நிர்வாகம், விளையாட்டு விளையாடுவதை முன்னிலைப் படுத்தாமல், இளையோரை ஒழுக்கத்திற்கும், நிர்வாகக் கட்டுப்பாட்டிற்கும் முன்னுரிமை கொடுத்து நல்ல பிரசைகளாக்க உறுதிகொள்ள வேண்டும். இத்தனை காலம் நடைபெற்ற இடர்களுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதுடன் உண்மை நிலையைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றோம்.
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
பொறுப்பாளர் ,
தமிழர் விளையாட்டுத்துறை – பிரான்சு.
tvt lt copy.jpg01

tvt lt copy.jpg02

tvt lt copy.jpgtvt003 (1)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here