வவுனியாவில் பயணிக்கும் தியாகச் சுடர் அன்னை பூபதி ஊர்திப் பவனி!

0
25

தியாகி அன்னை பூபதியின் 36 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இடம்பெறும் ஊர்திப் பவனியானது  13.04.2024 அன்று   வட தமிழீழம்  யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபி முன் மாலை 4.00 மணிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் பொன் மாஸ்ரர் தலைமையில் ஆரம்பமாகி முன்னணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா.கஜேந்திரன் அவர்களன் நினைவுரையுடன் பயணமான ஊர்தி யாழ் நகரை அண்டிய  கொக்குவில் அரசடி நாவாந்துறை அரியாலை  நல்லூர் திருநெல்வேலி வண்ணார்பண்ணை இனுவில் ஆகிய பகுதிகளூடாக மக்களின் வணக்கத்துக்காக சென்று முதல் நாள் ஊர்திப்பவனியை நிறைவு செய்தது இதில் பெரும் திரளான மக்கள் வீதீகள் தோறும் நின்று  நினைவு வணக்கம் செலுத்தி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். 

இந்நிலையில்  நான்காம்  நாளான இன்றைய நாள் (16.04.2024)  வவுனியாவில்    மக்கள் வணக்கத்திற்காக   தியாகச் சுடர் அன்னை பூபதி ஊர்திப் பவனி தொடர்ந்து  பயணித்து  வவுனியா நகர் குருமன்காடு வைரவபுளியங்குளம் கோயில்குளம் சிதம்பரபுரம் ஆசிகுளம் இலுப்பையடி தாண்டிக்குளம் ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் புளியங்குளம் நெடுங்கேணி கனகராயன்குளம்  ஆகிய இடங்களுக்கு மக்களின் வணக்கத்துக்காக சென்றடைகிறது 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here