மொஸ்கோ தாக்குதலின் பின்னால் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் உக்ரைன்!

0
28

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இசையரங்கில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் 139 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் தாக்குதல் நடத்திய தாக்குதலாளிகள் 4 உட்பட அதற்கு உடந்தையாக இருந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இத்தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் உக்ரைன் இருப்பதாக ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸின் (FSB) இயக்குனர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் நேற்று செவ்வாக்கிழமை கூறினார்.

கடந்த வாரம் நடந்த மாஸ்கோ கச்சேரி அரங்கு தாக்குதலில் உக்ரைனுக்கும் மேற்கிற்கும் பங்கு உண்டு என்று ரஷ்ய அதிகாரிகள் தொடர்ந்து கூறினர், கெய்வின் ஈடுபாட்டை கடுமையாக மறுத்தாலும், ஆப்கானிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அரசின் கே என்ற துணை அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. 

தாக்குதல் குறித்த உரிமை கோரல் வருவதற்கு முன்னரே அமெரிக்காவே ஐ.எஸ் அமைப்பே இத்தாக்குதலுக்கு பின்னர் உள்ளதாக செய்தியை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து மேற்குல நாடுகளும் அதன் ஊடகங்களும் இத்தகவலை வெளியிட்டது. இதன் பின்னரே ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியது. அத்துடன் தாக்குதல் குறித்த நேரலைக் காணொளியையும் வெளியிட்டது. எனினும் இத்தாக்குதலுக்குப் பின்னர் ஐ.எஸ் அமைப்பு இருப்தை ரஷ்யா நம்ப மறுக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here