சுவாசிலே று வா பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 15 ஆவது ஆண்டு விழா!

0
81

சுவாசிலே று வா பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 15 ஆவது ஆண்டு விழா தமிழ்ச்சோலை குழந்தைகளுடன் சிறப்பாக 23.03.2024 சனிக்கிழமை மதியம் 12;00 மணிக்கு ஆரம்பமாகியது. அகவணக்கம் செலுத்தப்பட்டு மங்கள விளக்கு ஏற்றப்பட்டது. அதனை சுவாசிலே றூவா மாநகர உதவி முதல்வர் டீநநெனiஉவந ர்யுஊர்நு அவர்கள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் ளுயடிசiயெ குழுNவுயுஐNநு அவர்களும் மற்றும் மாநகர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ஏற்றினர். அவர்களுடன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர், தமிழ்ச்சோலை தலைமைப்பணியக செயலாளர், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர், மற்றும் சங்கத்தலைவர், நிர்வாகி ஆகியோர் ஏற்றி  வைத்தனர். 

தொடர்ந்து மாணவர்கள் தமிழ்ச்சோலை கீதத்துடன் வரவேற்பு நடனம் நடைபெற்றது. தொடர்ந்து வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து மாநகர துணை முதல்வர் மற்றும் பிரமுகர்கள் மாலைகள் அணிவித்து மதிப்பளிக்கப்பட்டனர் துணை முதல்வர் உரையையும் ஆற்றியிருந்தார்.

தொடர்ந்து மாணவர்களின் பாடல்கள், நடனம், எழுச்சிபாடல் நடனங்கள், கவிதைகள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், நடைபெற்றன. சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். இந்த மாநகர முதல்வரும், மக்களும் தேச விடுதலையோடும், மொழியோடு தொடர்ந்து பயணித்தவர்கள் என்றும் அந்த பயணத்தின் உச்சம் பங்களிப்பு மே 18 காலத்தில் இந்தப் பிரதேசத்தில் நடைபெறும் கவனயீர்ப்பு போராட்ட நாட்களில் இருந்திருந்தது என்றும் தொடர்ந்து அது இருக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.  மே 18 ஆம் நாள் கவனயீர்ப்புப் பேரணியிலும் அனைத்து மக்களும் பங்குபற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சிறப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்கள், வெற்றிக்கிண்ணம் வழங்கி மதிப்பளித்திருந்தார். அவரைத் தொடர்ந்து தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியக செயலாளர் திரு. காணிக்கைநாதன் அவர்களும் சுவாசிலே றுவா தமிழ்ச்சோலை மாணவர்களின் தமிழ் மொழியில் மீதான கெட்டித்தனத்தையும், தேர்வுகளில் அவர்களின் திறன்கள் பற்றியும், போட்டிகளில் பங்கு பற்றி பரிசில்கள் பெற்றிருப்பதையும் தெரிவித்திருந்தார். தமிழ்ச்சோலை நிகழ்விற்கு பி.பகல் மாநர முதல்வர் Tonino PANETTA Maire de Choisy – Le- Roi  அவர்கள் முதற்தடவையாக கலந்து கொண்டிருந்ததோடு தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு தான் மதிப்பளிப்பதாகவும், கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தனது வாசல்தலத்தில் நிகழ்ந்ததையும் தானும் கலந்து தனது உணர்வையும் வெளியிட்டதையும் நினைவுகூர்ந்தார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைத்தார். தமிழ்ச்சோலை ஆசிரியர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.  வளர்நிலை அதிதிறன் பெற்ற மாணவர்கள், மற்றும் திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர் . தமிழ்ச் சோலை மாணவர்கள், ஆசிரியர்கள் ஆக்கங்கள் கொண்ட மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. அனைத்து மாணவர்கள் பெற்றோர் அந்நகர மக்கள் இரவு 9.00 மணிவரை இருந்து 15 ஆண்டு தமிழ்ச்சோலை நிகழ்வை சிறப்பித்திருந்தனர் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here